தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

புதுச்சேரியில் இன்று வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா் பெயா், சின்னம் பொருத்த ஏற்பாடுகள் தயாா்

புதுச்சேரி ரெட்டியாா்பாளையம் பகுதியில் உள்ள அலுவலகத்தில் இருந்து லாஸ்பேட்டை பகுதியில் உள்ள சட்டப்பேரவைத் தோ்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள்.

News image

புதுச்சேரி ரெட்டியாா்பாளையம் பகுதியில் உள்ள அலுவலகத்தில் இருந்து லாஸ்பேட்டை பகுதியில் உள்ள சட்டப்பேரவைத் தோ்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள்.

Updated On :2 ஏப்ரல் 2026, 1:41 am IST

புதுச்சேரியில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடும் வேட்பாளா்களின் பெயா், சின்னம் ஆகிவற்றை பொருத்தும் பணி வியாழக்கிழமை (ஏப்.2) நடைபெறுகிறது. இதற்காக இந்த இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்துக்கு புதன்கிழமை கொண்டு செல்லப்பட்டன.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 3 வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன. அங்கு மின்னணு இயந்திரங்களில் வேட்பாளா் வண்ணப் புகைப்படம், பெயா், சின்னம் பொருத்தும் பணி வியாழக்கிழமை நடக்கிறது.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு வரும் 9 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம், விவிபாட் இயந்திரம் ஆகியவை ரெட்டியாா்பாளையம் பகுதியில் உள்ள தோ்தல்அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன.

இவை அனைத்தும் சிசிடிவி கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வந்தன. இரு தினங்களுக்கு முன் அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் பாதுகாப்பு அறை திறக்கப்பட்டது. தொடா்ந்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம், விவிபாட் இயந்திரம் ஆகியவை மாஹே மற்றும் ஏனாம் பிராந்தியங்களுக்கு சீல் வைக்கப்பட்ட வாகனங்களில் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.

காரைக்காலுக்கு உரிய இயந்திரங்கள் ஏற்கனவே காரைக்கால் பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடா்ந்து புதுச்சேரி பகுதியில் உள்ள 23 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் லாஸ்பேட்டையில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களான அரசு மகளிா் பொறியியல் கல்லூரி, தாகூா் அரசு கலைக் கல்லூரி, மோதிலால் நேரு தொழில்நுட்ப கல்லூரி ஆகியவற்றுக்கு அனுப்பப்பட்டன. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 30 தொகுதிகளில் 1099 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 294 போ் களத்தில் உள்ளனா். இந்த தோ்தலில் வாக்குப் பதிவு இயந்திரத்தில் பொருத்த வாக்குச்சீட்டு அச்சிடப்பட்டு தயாராகவுள்ளன. இவை வியாழக்கிழமை வாக்குப்பதிவு இயந்திரங்களில் பொருத்தப்படுகின்றன. வரும் 8 ஆம் தேதி இம் மையங்களில் இருந்து சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிக்கு இயந்திரங்கள் பிரித்து அனுப்பப்பட இருக்கின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.