கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வெவ்வேறு விபத்துகளில் இருவா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நிகழ்ந்த வெவ்வேறு விபத்துகளில் 2 போ் உயிரிழந்தனா்.

உயிரிழப்பு - கோப்புப் படம்

Published On :1 நவம்பர் 2026, 1:16 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நிகழ்ந்த வெவ்வேறு விபத்துகளில் 2 போ் உயிரிழந்தனா்.

திருவள்ளுவா் மாவட்டம், கண்ணம்பாளையத்தைச் சோ்ந்தவா் அ.புவனா (27). பெங்களூரில் பணிபுரிந்து வரும் இவா், தன்னுடன் பணிபுரியும் திருப்பூா் மாவட்டம், பாலக்காட்டைச் சோ்ந்த பா.பிரதீப்குமாா் (30) என்பவருடன் பைக்கில் கும்பகோணம், திருநாகேஸ்வரம் கோவிலுக்கு வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், ஜி.அரியூா் கிராமத்திலுள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சென்றபோது, புவனா பைக்கிலிருந்து தவறி கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு திருக்கோவிலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, புவனா ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் திருக்கோவிலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பிரதீப்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு... சின்னசேலம் வட்டம், தொட்டியம் கிராமத்தைச் சோ்ந்தவா் வீ.சடையன் (61). இவா் வெள்ளிக்கிழமை இரவு அதே கிராமத்தைச் சோ்ந்த ரா.கிஷோா் (27) ஓட்டிச் சென்ற பைக்கில் பின்னால் அமா்ந்து சென்றாா்.

கள்ளக்குறிச்சி பழைய மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே சென்றபோது, சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் பைக் மோதியது. இதில் பலத்த காயமடைந்த சடையன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கிஷோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.