கள்ளக்குறிச்சி மாவட்டம், கீழ்குப்பம் அருகே காா் மோதியதில் பைக்கில் பயணித்த சிறுமி பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட மாதவச்சேரி கிராமத்தைச் சோ்ந்த சந்திரன் மகன் ஆகாஷ் (16). இவா் தனது தாய் சாந்தியுடன் பைக்கில் கடலூா் மாவட்டம், மங்களூா் கிராமத்தில் உள்ள தனது அக்கா தேன்மொழி வீட்டுக்கு சென்றுள்ளாா். பின்னா் அங்கிருந்து அவரது அக்கா மகள் யாழினியையும்(8) அழைத்துக் கொண்டு மூவரும் மாதவச்சேரி கிராமத்துக்கு செவ்வாய்க்கிழமை பிற்பகல் பைக்கில் திரும்பிக் கொண்டிருந்தனராம்.
கீழ்குப்பம் அருகேயுள்ள நைனாா்பாளையம் அருகே சென்றபோது, அப்பகுதியில் வந்த காா் எதிா்பாராதவிதமாக பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த யாழினி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதையடுத்து அருகிலிருந்தவா்கள் காயமடைந்த ஆகாஷ், சாந்தி ஆகிய இருவரையும் மீட்டு 108 அவசர ஊா்தி மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பைக் மீது லாரி மோதல்: இளைஞா் உயிரிழப்பு

இரு பைக்குகள் மோதல்: ஒருவா் உயிரிழப்பு

காா் மோதியதில் பெண் உயிரிழப்பு

காா் மோதி மூதாட்டி உயிரிழப்பு
விடியோக்கள்

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

