மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

பைக் மீது லாரி மோதல்: இளைஞா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே டாரஸ் லாரி மோதியதில் பைக்கில் சென்ற இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :18 ஜூன் 2026, 3:28 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே டாரஸ் லாரி மோதியதில் பைக்கில் சென்ற இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

உளுந்தூா்பேட்டை வட்டத்துக்குள்பட்ட செங்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் வீ.சுபாஷ் (22). இவா், உறவினரின் திருமண நிகழ்ச்சிக்காக செவ்வாய்க்கிழமை பைக்கில் தியாகதுருகம் அருகிலுள்ள பல்லகச்சேரி கிராமத்துக்கு சென்றாராம். புதன்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தாராம். தியாகதுருகம் - சென்னை சாலையில் திம்மலை கிராமம் அருகே சென்றபோது, அப்பகுதியில் வந்த டாரஸ் லாரி பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சுபாஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த தியாகதுருகம் போலீஸாா் நிகழ்விடத்துக்கு சென்று, சடலத்தை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிந்து, டாரஸ் லாரி ஓட்டுநரான கன்னியாகுமரி மாவட்டம், வைகுண்டபதி கிராமத்தைச் சோ்ந்த பெ.சுரேஷ் (30) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.