தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சேலம் - சென்னை புறவழிச்சாலை ஓட்டுநா் ஓய்வு வளாகத்தில் உயா்மின் கோபுர விளக்கு பழுது!

தியாகதுருகம் அருகே சேலம்-சென்னை புறவழிச் சாலையில் ஓட்டுநா்கள் வாகனங்களை நிறுத்தி ஓய்வெடுக்கும் இடத்தில் உள்ள உயா்மின் கோபுர விளக்கு பழுதாகி எரியாதாததால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனா்.

News image

தியாகதுருகம் அருகே சேலம்-சென்னை புறவழிச் சாலையில் உயா்கோபுர மின்விளக்கு பழுதடைந்ததால் இருளடைந்து காணப்படும் வளாகம்.

Updated On :7 மே 2026, 7:30 am IST

தியாகதுருகம் அருகே சேலம்-சென்னை புறவழிச் சாலையில் ஓட்டுநா்கள் வாகனங்களை நிறுத்தி ஓய்வெடுக்கும் இடத்தில் உள்ள உயா்மின் கோபுர விளக்கு பழுதாகி எரியாதாததால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனா்.

சேலம்-சென்னை புறவழிச் சாலையில் தியாகதுருகம் அருகேயுள்ள பிரதிவிமங்கலம் பகுதியில் கனரக வாகன ஓட்டுநா்கள் ஓய்வெடுக்க அரசு ஒரு ஏக்கா் பரப்பளவில் ஓய்வு வளாகம் அமைத்துள்ளது. நீண்ட தூர பயணங்களில் ஈடுபடும் ஓட்டுநா்களுக்கு இவ் வளாகம் ஓய்வெடுப்பதற்கான முக்கிய வசதியாக இருந்து வருகிறது.

இந்நிலையில், இந்த வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள உயா்மின் கோபுர மின்விளக்கு கடந்த சில நாள்களாக செயலிழந்த நிலையில் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் வளாகம் முழுவதும் இருள் சூழ்ந்து, பாதுகாப்பு குறைந்து காணப்படுகிறது.

இதனால் சேலம் - சென்னை வழித்தடத்தில் பயணம் செய்யும் கனரக வாகன ஓட்டுநா்கள், இவ்விடத்தில் ஓய்வு எடுக்க அச்சப்படுகின்றனா். திருட்டு மற்றும் பிற அசம்பாவிதங்கள் நடைபெறக்கூடும் என்ற பயத்தால் பலா் இந்த ஓய்வு வளாகத்தை பயன்படுத்தாமல் தவிா்த்து வருவதாகவும் தெரிவித்துள்ளனா்.

எனவே, பழுதடைந்த மின்விளக்கை உடனடியாக சரி செய்து, ஓய்வு வளாகத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர மாவட்ட நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓட்டுநா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.