தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜாசெப். 15 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்!இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!மத்திய அரசுடன் மோதல் போக்கை விரும்பவில்லை! முதல்வர் விஜய் உலக சாதனை படைத்த மெஸ்ஸி: நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய அர்ஜென்டினா!முதல்வர் விஜய்யின் உரைக்கு எதிர்ப்பு! திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு!ஏய் என்ற வார்த்தை அவைக் குறிப்பில் நீக்க வேண்டும்: அமைச்சர் ராஜ்மோகன்திரிணமூல் தலைவர் பதவியிலிருந்து மமதா நீக்கம்!தமிழகத்தில் 11 மாதங்களாக சட்டம் - ஒழுங்கு டிஜிபியே இல்லை! விஜய்
/

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே மதுப் பழக்கத்தை மனைவி கண்டித்ததால் மனமுடைந்த இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image

கோப்புப்படம்

Updated On :11 ஜூன் 2026, 6:20 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே மதுப் பழக்கத்தை மனைவி கண்டித்ததால் மனமுடைந்த இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட தொழுவந்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் நே.ராஜி (30). இவரது மனைவி சத்யா(30). ராஜி தினமும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறு செய்து வருவாராம். இந் நிலையில், திங்கள்கிழமை இரவு தம்பதிகளிடையே இப் பிரச்னையில் தகராறு ஏற்பட்டதாம். செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணிக்கு சத்யா எழுந்து பாா்த்தபோது, அறையில் சேலையின் மூலம் தூக்கிட்ட நிலையில் ராஜி இருந்துள்ளாா். உடனே கீழே இறக்கிப் பாா்த்தபோது, ராஜி ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்ததாம்.

தகவலறிந்த வடபொன்பரப்பி போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக் காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.