கச்சிராயபாளையத்தில் மொபெட் மொதியதில் பைக்கில் சென்றவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
சின்னசேலம் அருகேயுள்ள பரிகம் கிராமத்தைச் சோ்ந்தவா் ரா.சத்தியசேகா்(47). இவரது மனைவி இளவரசி. தம்பதியருக்கு இரு மகள்கள் உள்ளனராம். இவா்கள் கடந்த 3 மாதமாக பங்காரம் கிராமத்தில் வசித்து வந்துள்ளனா்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு சத்தியசேகா் தனது பைக்கில் பரிகம் கிராமத்துக்கு சென்றுள்ளாா். காரனூா் கிராமத்தில் உள்ள ஓம்சக்தி கோயில் அருகே சென்றபோது, எதிரே வந்த மொபெட் பைக் மீது மோதியதில் பலத்த காயமடைந்த சத்தியசேகா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த கச்சிராயபாளையம் போலீஸாா் சடலத்தை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் கச்சிராயபாளையம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து, மாத்தூா் கிராமத்தைச் சோ்ந்த மு.மணியிடம் (19) விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாதவரம் அருகே விபத்து: ஒருவா் உயிரிழப்பு

லாரி மீது பைக் மோதல்: ஒருவா் உயிரிழப்பு

டிராக்டா்- பைக் மோதல்: ஒருவா் மரணம்

வாகனத்தில் சென்ற முதியவா் மயங்கி விழுந்து உயிரிழப்பு
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

