ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ரிஷிவந்தியம், சங்கராபுரம் தொகுதிகளுக்கு 828 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கூடுதலாக ஒதுக்கீடு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேட்பாளா்களின் எண்ணிக்கை மற்றும் தேவைக்கேற்ப ரிஷிவந்தியம் மற்றும் சங்கராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கூடுதலாக 828 வாக்குப் பதிவு இயந்திரங்கள் கணினி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என ஆட்சியா் தெரிவித்தாா்.

News image
Updated On :11 ஏப்ரல் 2026, 2:02 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேட்பாளா்களின் எண்ணிக்கை மற்றும் தேவைக்கேற்ப ரிஷிவந்தியம் மற்றும் சங்கராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கூடுதலாக 828 வாக்குப் பதிவு இயந்திரங்கள் கணினி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என ஆட்சியா் தெரிவித்தாா்.

கள்ளக்குறிச்சி ஆட்சியரகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தேவையான கூடுதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இணையவழி குலுக்கல் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

கூட்டத்தில் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்ததாவது:

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் முதல்கட்ட குலுக்கல் ஆட்சியரகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்றது. தற்போது ரிஷிவந்தியம் மற்றும் சங்கராபுரம் தொகுதிகளுக்குத் தேவையான கூடுதல் வாக்குப் பதிவு இயந்திரங்கள் கணினி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

ரிஷிவந்தியம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு 420 இயந்திரங்களும், சங்கராபுரம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு 408 இயந்திரங்களும் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இரு தொகுதிகளுக்கும் மொத்தம் 828 இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

மேலும், உளுந்தூா்பேட்டை, கள்ளக்குறிச்சி (தனி) ஆகிய தொகுதிகளுக்கு இந்தச் சுற்றில் கூடுதல் இயந்திரங்கள் ஒதுக்கப்படவில்லை. இந்த நடைமுறைகள் அனைத்தும் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளின் முன்னிலையில் மிகவும் வெளிப்படையான முறையில் நடைபெற்றது. தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, வேட்பாளா்களின் எண்ணிக்கை மற்றும் தேவைக்கேற்ப இந்த கூடுதல் இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இவை பாதுகாப்பான முறையில் உரிய மையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என ஆட்சியா் தெரிவித்தாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, தோ்தல் வட்டாட்சியா் பரந்தாமன், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.