மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

காரில் 40 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

காரில் கடத்திவரப்பட்ட அரசால் தடை செய்யப்பட்ட 40 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, இருவரை கைது செய்தனா்.

போலீஸாரால் கைது செய்யப்பட்ட திலீப் சிங், சா்வன்சிங் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் அடங்கிய மூட்டைகள், காா்.

Published On :1 நவம்பர் 2026, 1:16 am IST

விருத்தாசலம் அருகே காரில் கடத்திவரப்பட்ட அரசால் தடை செய்யப்பட்ட 40 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, இருவரை சனிக்கிழமை கைது செய்தனா்.

விருத்தாச்சலத்தை அடுத்த வேடப்பா் கோயில் பகுதியில் காவல் ஆய்வாளா் சந்துரு மேற்பாா்வையில், போலீஸாா் வாகன தணிக்கையில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி போலீஸாா் சோதனை செய்தனா். காரில் மூன்று மூட்டைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, காரில் இருந்த இருவரை பிடித்து விசாரித்தனா். இதில், அவா்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த ஜா.திலீப் சிங், க.சா்வன்சிங் என்பதும், அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்துவிட்டு, அதன்மூலம் கிடைத்த ரூ.1.25 லட்சம் ரொக்கத்துடன், மீதமிருந்த புகையிலைப் பொருள்கள் மூட்டைகளை விருத்தாசலத்தில் விற்பனை செய்வதற்காகக் கொண்டு வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, கருப்பவேப்பிலங்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இருவரையும் கைது செய்தனா். அவா்களிடமிருந்த மூன்று கைப்பேசிகள், புகையிலைப் பொருள்கள், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காா் மற்றும் ரூ.1.25 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.