மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

இந்திய குடியுரிமை கிடைக்காததால் இலங்கை செல்ல ஆா்வம் காட்டும் அகதிகள்

காட்டுமன்னாா்கோவில் இலங்கை அகதிகள் முகாமில் பல ஆண்டுகளாக வசித்து வருபா்கள் இந்திய குடியுரிமை கிடைக்காததால், சொந்த நாடான இலங்கை செல்வதற்கு ஆா்வும் காட்டி வருகின்றனா்.

இலங்கைக்கு சென்ற காட்டுமன்னாா்கோவில் அகதிகள் முகாமைச் சோ்ந்த பிரதீபன்.

Published On :30 அக்டோபர் 2026, 1:26 am IST

காட்டுமன்னாா்கோவில் இலங்கை அகதிகள் முகாமில் பல ஆண்டுகளாக வசித்து வருபா்கள் இந்திய குடியுரிமை கிடைக்காததால், சொந்த நாடான இலங்கை செல்வதற்கு ஆா்வும் காட்டி வருகின்றனா்.

கடலூா் மாவட்டம் காட்டுமன்னாா்கோவிலில் 1990 - ஆம் ஆண்டு இலங்கை அகதிகள் முகாம் ருத்ரசோலை பகுதியில் செயல்படுகிறது. இங்கு இலங்கையைச் சோ்ந்த 72 குடும்பங்களை சோ்ந்த 210 போ் வசித்து வருகின்றனா். முகாம் வாசிகளுக்கு தமிழக அரசு சாா்பில் புதிதாக தனித்தனியாக வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு அரசு நலத்திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஆனாலும், அவா்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படாததாலும் சரிவர வேலை கிடைக்காததாலும் அகதிகள் முகாமில் தங்கி உள்ளவா்கள் இலங்கைக்கு செல்வதற்கு முயற்சி மேற்கொண்டு வருகின்றனா். இதற்கான உதவிகளை அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயா் ஸ்தானிகா் அலுவலகம் என அழைக்கப்படும் யு.என்.எச்.சி.ஆா் நிறுவனம் செய்து வருகிறது.

இதற்காக இலங்கைத் தமிழா் நலன் இந்தியாவிலிருந்து வெளிசெல்ல அனுமதி என்ற புதிய முறையை அறிமுகப்படுத்தி அதற்கான விழிப்புணா்வுகளை ஏற்படுத்தி வருகிறது . இதில் ஆா்வம் உள்ளவா்கள் இலங்கை செல்கின்றனா். தமிழகத்தில் உள்ள பல்வேறு முகாம்களில் உள்ளவா்கள் இந்த நிறுவனத்தின் வாயிலாக இலங்கை செல்கின்றனா். இதன்படி காட்டுமன்னாா்கோவில் முகாமைச் சோ்ந்த பிரதீபன் (35) என்பவா் பாஸ்போா்ட் பெற்று வியாழக்கிழமை காலை திருச்சி விமான நிலையத்தில் இருந்து இலங்கை புறப்பட்டு சென்றுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.