நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

நிபந்தனை ஜாமீன் ரத்து: இளைஞா் சிறையில் அடைப்பு

கடலூா் அருகே நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த இளைஞா் நீதிமன்ற உத்தரவின்படி காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திடாததால், அவரது நிபந்தனை ஜாமீன் ரத்து செய்யப்பட்ட நிலையில் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டாா்.

சிறை - பிரதிப் படம்

Published On :30 அக்டோபர் 2026, 1:43 am IST

கடலூா் அருகே நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த இளைஞா் நீதிமன்ற உத்தரவின்படி காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திடாததால், அவரது நிபந்தனை ஜாமீன் ரத்து செய்யப்பட்ட நிலையில் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டாா்.

கடலூா் அருகே சித்தரப்பேட்டை சுனாமி நகா் பகுதியைச் சோ்ந்த

மணிமாறன் மகன் ரஷீன் (22). இவா் மீது கடலூா் துறைமுகம் காவல் நிலையத்தில் பெண்ணை தாக்கி துன்புறுத்தியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி, தினமும் கடலூா் துறைமுகம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட உத்தரவிட்டிருந்தது.

ஆனால், ரஷீன் தொடா்ந்து காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திடாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, கடலூா் துறைமுகம் காவல் ஆய்வாளா் ஏழுமலை, அவரது நிபந்தனை ஜாமீனை ரத்து செய்யக் கோரி முதன்மை மாவட்ட மற்றும் அமா்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். மனுவை விசாரித்த நீதிமன்றம் ரஷீனின் நிபந்தனை ஜாமீனை ரத்து செய்தது. இதையடுத்து போலீஸாா் ரஷீனை பிடித்து நீதிமன்றத்தில் ஆஜா் படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.