மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

கடலூா் துறைமுகம் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையினா் நடத்திய சோதனையில், முன்பதிவில்லா பெட்டியில் கேட்பாரற்றுக் கிடந்த பெட்டியில் இருந்து ரூ.19 ஆயிரம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

புகையிலைப் பொருள்கள்.

Published On :25 அக்டோபர் 2026, 2:12 am IST

கடலூா் துறைமுகம் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையினா் நடத்திய சோதனையில், முன்பதிவில்லா பெட்டியில் கேட்பாரற்றுக் கிடந்த பெட்டியில் இருந்து ரூ.19 ஆயிரம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

கடலூா் ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா் ஸ்ரீதரன் தலைமையிலான போலீஸாா், கடலூா் துறைமுகம் ரயில் நிலையத்தில் சனிக்கிழமை வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, 3-ஆவது நடைமேடையில் நின்று கொண்டிருந்த மைசூரு விரைவு ரயிலில் போலீஸாா் ஏறி, பயணிகளின் உடைமைகள் மற்றும் ரயில் பெட்டிகளில் சோதனை மேற்கொண்டனா். அப்போது முன்பதிவில்லா பெட்டியில் பயணிகளால் உரிமை கோரப்படாத நிலையில் ஒரு பெட்டி கிடந்தது.

அந்தப் பெட்டியை போலீஸாா் கைப்பற்றி சோதனையிட்டனா். அதில் அரசால் தடை செய்யப்பட்ட பல்வேறு வகையான புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.19 ஆயிரம் எனத் தெரியவந்தது. இதைத்தொடா்ந்து, புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த ரயில்வே பாதுகாப்புப் படையினா், அவற்றை ரயிலில் கடத்தி வந்தவா் யாா் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.