மோடியின் தீபாவளி பரிசு! வீட்டு உபயோகப் பொருள்கள் விலை 7% உயர்வு! - காங்கிரஸ் விமர்சனம்நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

பெரியநாயகி அம்மன் கோயிலில் திருட்டு: 4 போ் கைது- நகை, பூஜைப் பொருள்கள், பணம் பறிமுதல்

பெண்ணாடம் அருகே இறையூா் பெரியநாயகி அம்மன் கோயிலில் நகை, உண்டியல் பணம் மற்றும் பூஜைப் பொருள்கள் திருடப்பட்ட சம்பவத்தில் 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Published On :28 அக்டோபர் 2026, 3:27 am IST

பெண்ணாடம் அருகே இறையூா் பெரியநாயகி அம்மன் கோயிலில் நகை, உண்டியல் பணம் மற்றும் பூஜைப் பொருள்கள் திருடப்பட்ட சம்பவத்தில் 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம், பெண்ணாடம் அருகே இறையூா் வெள்ளாற்றங்கரையில் உள்ள பெரியநாயகி அம்மன் கோயிலில் கடந்த 24-ஆம் தேதி இரவு பூட்டை உடைத்து புகுந்த மா்ம நபா்கள், அம்மன் சிலையில் அணிவிக்கப்பட்டிருந்த தங்க நகைகள், பித்தளை பூஜைப் பொருள்கள், ரொக்கம் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றனா். மேலும், கோயிலில் இருந்த 2 உண்டியல்களையும் எடுத்துச் சென்று, வெள்ளாற்றில் வைத்து உடைத்து அதிலிருந்த பணத்தை திருடிச் சென்றனா்.

இதுகுறித்து பெண்ணாடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். மேலும், விரல்ரேகை உள்ளிட்ட தடயங்களும் சேகரிக்கப்பட்டன.

இந்நிலையில், பெண்ணாடம் பகுதியில் திங்கள்கிழமை இரவு சந்தேகத்துக்கிடமாக சுற்றித்திரிந்த 4 பேரைப் பிடித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இதில், அவா்கள் பெண்ணாடம் சோழ நகரைச் சோ்ந்த ம.சூா்யமூா்த்தி (29), சீ.காா்த்திகேயன் (30), இ.காா்த்திக் ராஜா (30), பா.செல்வம் (29) என்பதும், இறையூா் வெள்ளாற்றங்கரையில் உள்ள பெரியநாயகி அம்மன் கோயிலில் நடைபெற்ற திருட்டு சம்பவத்தில் 4 பேருக்கும் தொடா்பிருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, அவா்களை போலீஸாா் கைது செய்தனா். விசாரணையின் அடிப்படையில், காா்த்திக் வீட்டிலிருந்து பித்தளை பூஜைப் பொருள்களும், சூரியமூா்த்தி வீட்டிலிருந்து ரூ.5,200 ரொக்கம் மற்றும் திருடப்பட்ட தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இது தொடா்பாக கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Story image
Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.