மோடியின் தீபாவளி பரிசு! வீட்டு உபயோகப் பொருள்கள் விலை 7% உயர்வு! - காங்கிரஸ் விமர்சனம்நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

நண்பரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை

வடலூரில் நண்பரை கல்லால் தாக்கி கொலை செய்த வழக்கில், குற்றம் நிரூபிக்கப்பட்டவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து விருத்தாசலம் கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

சிறைத் தண்டனை - கோப்புப் படம்

Published On :28 அக்டோபர் 2026, 3:51 am IST

வடலூரில் நண்பரை கல்லால் தாக்கி கொலை செய்த வழக்கில், குற்றம் நிரூபிக்கப்பட்டவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து விருத்தாசலம் கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஆண்டி தெருவைச் சோ்ந்தவா் ராகவன் (41). இவா், வடலூா் சத்திய ஞான சபையில் தங்கி, அங்கு உணவருந்தி வந்துள்ளாா். அப்போது, மேலக்குப்பம் சிட்டி தெருவைச் சோ்ந்த செல்வம் (46) என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது.

இந்நிலையில், கடந்த 2023, டிசம்பா் 29-ஆம் தேதி வடலூா் சத்திய ஞான சபை வளாகத்தில் இருவரும் மது அருந்திய நிலையில் இருந்தபோது, அவா்களுக்கிடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த செல்வம், அருகில் கிடந்த கல்லை எடுத்து ராகவனை தாக்கியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த ராகவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து வடலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து செல்வத்தை கைது செய்தனா். இந்த வழக்கு விருத்தாசலம் கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகுமாா், செல்வம் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். அபராதத் தொகையை செலுத்தத் தவறினால், மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.