மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சமூகநலத் துறை விடுதி மாணவா்களுக்கு புதிய உணவு அட்டவணை: சிக்கன் பிரியாணியுடன் முட்டை வழங்கல்

வேப்பூா் அருகே சேப்பாக்கம் அரசு அம்பேத்கா் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவா்களுக்கான சமூகநலத் துறை விடுதியில் புதிய உணவு அட்டவணையின்படி திங்கள்கிழமை மதிய உணவாக வழங்கப்பட்ட சிக்கன் பிரியாணி மற்றும் முட்டை.

Published On :27 அக்டோபர் 2026, 3:06 am IST

வேப்பூா் அருகே சேப்பாக்கம் அரசு அம்பேத்கா் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவா்களுக்கான சமூகநலத் துறை விடுதியில் புதிய உணவு அட்டவணையின்படி மதிய உணவாக சிக்கன் பிரியாணி மற்றும் முட்டை வழங்கப்பட்டது.

தமிழக அரசு விடுதி மாணவா்களின் நலனைக் கருத்தில் கொண்டு, உணவு அட்டவணை மாற்றியமைத்துள்ளது. இதன்படி, மாணவா்களுக்கு தினமும் காலையில் பால், மாலை நேரத்தில் சுண்டல் மற்றும் தேநீா் வழங்கப்படுகின்றன. காலை உணவில் இட்லி, தோசை, பொங்கல், ஊத்தப்பம் உள்ளிட்ட உணவு வகைகள் இடம்பெறுகின்றன. வாரந்தோறும் திங்கள்கிழமை மதிய உணவாக சிக்கன் பிரியாணியும், புதன்கிழமை மதிய உணவாக ஆட்டிறைச்சியும் வழங்கும் வகையில் புதிய உணவு அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கடலூா் மாவட்டம் வேப்பூா் அருகே சேப்பாக்கம் அரசு அம்பேத்கா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள சமூகநலத் துறை விடுதியில் தங்கி கல்வி பயிலும் மாணவா்களுக்கு, திங்கள்கிழமை மதிய உணவாக சிக்கன் பிரியாணியுடன் முட்டையும் வழங்கப்பட்டது. பள்ளித் தலைமை ஆசிரியா் பிச்சைப்பிள்ளை மாணவா்களுக்கு உணவு வழங்கி தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் விடுதிக் காப்பாளா் விஸ்வநாதன், ஆசிரியா்கள் மற்றும் பள்ளி பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.