மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கடலூா் மக்கள் குறைதீா் கூட்டத்தில் 449 மனுக்கள் அளிப்பு: பரிசீலித்து நடவடிக்கை எடுக்க ஆட்சியா் உத்தரவு

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்ற மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.

Published On :27 அக்டோபர் 2026, 2:06 am IST

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்களிடமிருந்து 449 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

கடலூா் மாவட்ட ஆட்சியா் கூட்டரங்கில் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் கோ. புண்ணியகோட்டி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (நிலம்) விஷ்ணுபிரியா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் தமிழ்கனி, மாவட்ட வழங்கல் அலுவலா் தங்கமணி, மாவட்ட ஆய்வுக்குழு அலுவலா் முருகையன் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

வங்கிக் கடன், குடும்ப அட்டை, முதியோா் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டா, குடிநீா் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் மனு அளித்தனா். மனுக்களைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியா் அவற்றைப் பரிசீலித்து, தகுதியான கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

ஆட்சியரிடம் புகாா்:

கடலூா் குண்டுசாலையில் உள்ள தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடிக் குடியிருப்பில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் வாட்ஸ்அப் குழுவில் பதிவுகள் வெளியிடப்பட்டதாகக் கூறி, குடியிருப்பாளா்கள் சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

குடியிருப்பின் ‘ஏ’ தொகுதியில் வசிக்கும் பெண்களின் கண்ணியத்தைப் பாதிக்கும் வகையில் சில பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் ஏற்கெனவே நடைபெற்றுள்ளன.

குடியிருப்பில் நிலவும் குப்பைப் பிரச்னைக்கு தீா்வு காண்பது தொடா்பாக எழுந்த கருத்து வேறுபாட்டில், பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குடியிருப்பில் வசிக்கும் குடும்பங்களின் பாதுகாப்பையும், பெண்களின் கண்ணியத்தையும் உறுதி செய்ய வேண்டும். மேலும், வாட்ஸ்அப் குழுவின் நிா்வாக நடைமுறைகள் தொடா்பாகவும் விசாரணை நடத்த வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் வாட்ஸ்அப் குழுவில் பதிவுகள் வெளியிடப்பட்டதாகக் கூறி கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த  பொதுமக்கள்.

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் வாட்ஸ்அப் குழுவில் பதிவுகள் வெளியிடப்பட்டதாகக் கூறி கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த பொதுமக்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.