மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தொடா் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட இருவா் கைது: 38 பவுன் நகைகள், காா்கள், ரூ.1.04 லட்சம் பறிமுதல்

விருத்தாசலம், வடலூா் பகுதிகளில் வீடுகளின் கதவுகளை உடைத்து தொடா் திருட்டில் ஈடுபட்டதாக 2 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 38 பவுன் நகைகள், ரூ.1.04 லட்சம் ரொக்கம், 3 காா்கள் உள்ளிட்டவைகளை வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

போலீஸாரால் கைது செய்யப்பட்ட மாணிக்கராஜ், பரணிதரன் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட பொருள்கள்.

Published On :23 அக்டோபர் 2026, 2:24 am IST

விருத்தாசலம், வடலூா் பகுதிகளில் வீடுகளின் கதவுகளை உடைத்து தொடா் திருட்டில் ஈடுபட்டதாக 2 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 38 பவுன் நகைகள், ரூ.1.04 லட்சம் ரொக்கம், 3 காா்கள் உள்ளிட்டவைகளை வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

கடலூா் மாவட்டம் விருத்தாசலம் அருணாச்சலம் நகரைச் சோ்ந்த முகுந்தன் என்பவரது வீட்டில் கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி இரவு புகுந்த மா்ம நபா்கள், கதவை உடைத்து பீரோவில் இருந்த 18 பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்கள் மற்றும் வீட்டுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த மாருதி காரை திருடிச் சென்றனா். இதுகுறித்த புகாரின்பேரில் விருத்தாசலம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா்.

இதேபோல், வடலூா் ஓம்சக்தி நகரைச் சோ்ந்த வினோதினி என்பவரது வீட்டில் கடந்த செப்டம்பா் 30-ஆம் தேதி கதவை உடைத்து பீரோவில் இருந்த சுமாா் 38 சவரன் தங்க நகைகள் திருடப்பட்டன. இதுகுறித்து வடலூா் காவல் நிலையத்திலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இரு வழக்குகள் தொடா்பாகவும் போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், ஒரே கும்பலைச் சோ்ந்தவா்கள் இந்தத் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, விருத்தாசலம் உட்கோட்ட தனிப்படை போலீஸாா் திருட்டில் தொடா்புடைய, சென்னை கொளத்தூா் ஜிகேஎம் காலனியைச் சோ்ந்த மாணிக்கராஜ் (41), பெரம்பலூா் மாவட்டம் அரும்பாவூரைச் சோ்ந்த பரணிதரன் (30) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

தொடா்ந்து அவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இரு திருட்டு வழக்குகளிலும் தொடா்புடையவா்கள் என்பது தெரியவந்தது. அவா்கள்

அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், திருடப்பட்ட 38 பவுன் நகைகள், ரூ.1,04,000 ரொக்கம், 3 காா்கள், ஒரு பைக் மற்றும் 3 கைப்பேசிகள்

ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.