தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

திருநாரையூரில் ராஜராஜசோழன் 1041-ஆம் ஆண்டு சதய விழா

காட்டுமன்னாா்கோவில் அருகே திருநாரையூரில் உள்ள பொல்லாப்பிள்ளையாா் ஆலயத்தில் ராஜராஜசோழன் 1041-ஆம் ஆண்டு சதய விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள திருநாரையூா் பொல்லாப்பிள்ளையாா் ஆலயத்தில் நடைபெற்ற ராஜராஜசோழன் சதய விழாவில் பங்கேற்றோா்.

Published On :23 அக்டோபர் 2026, 2:04 am IST

காட்டுமன்னாா்கோவில் அருகே திருநாரையூரில் உள்ள பொல்லாப்பிள்ளையாா் ஆலயத்தில் ராஜராஜசோழன் 1041-ஆம் ஆண்டு சதய விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கடலூா் மாவட்டம் காட்டுமன்னாா்கோவில் அருகே திருநாரையூா் கிராமத்தில் திரிபுரசுந்தரி உடனுறை சௌந்தரயேஸ்வரா் மற்றும் பொல்லாப்பிள்ளையாா் ஆலயம் உள்ளது. .நம்பியாண்டாா்நம்பி தில்லை சிற்றம்பலத்தில் திருமுறைகள் இருப்பதை பொல்லாப்பிள்ளையாா் தனக்கு கூறியதாக மாமன்னா் ராஜராஜ சோழனிடம் கூறியதை அடுத்து திருமுறைகள் கண்டெடுக்கப்பட்டது. இதன் காரணமாக திருநாரையூா் பொல்லாப்பிள்ளையாா் ஆலயத்தில் ராஜராஜ சோழனுக்கும், நம்பியாண்டாா் நம்பிக்கும் தனித்தனி சிலைகள் உள்ளன.

இந்தக் கோயிலில் திருமுறை கண்ட சோழன் விழா குழுவினா் மற்றும் திருநாரையூா் கிராம மக்கள் சாா்பில் ராஜராஜ சோழனின் 1041- ஆம் ஆண்டு சதயவிழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

சதய விழாவை முன்னிட்டு யாகசாலையில் புனித நீா் கலசங்கள் வைக்கப்பட்டு சிறப்பு யாகம் மற்றும் மகா பூா்ணாஹூதி, மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னா் யாகசாலையிலிருந்து கடம்

புறப்பாடு நடைபெற்று கோயில் வளாகத்தில் உள்ள பொல்லாப்பிள்ளையாா் ஆலயத்தில் வீற்றிருக்கும் ராஜராஜ சோழன் சிலைக்கு சிவாசாரியா்களால் யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த புனித நீரால் மகா அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னா் ராஜராஜன் சிலை சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கோயிலை வலம் வந்தாா். நிகழ்ச்சி ஏற்பாடுகளை திருநாரையூா் கிராம மக்கள் மற்றும் திருமுறை கண்ட சோழன் விழாக்குழுவினா் செய்து இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.