ஜிபே செயலியில் வந்திருக்கும் பயோமெட்ரிக் பயன்பாடு! வேண்டாம் எனில் மாற்றுவதற்கான வழி?கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: 5வது நாளாக ஏற்றம் கண்ட சென்செக்ஸ், நிஃப்டி!தவெகவுக்கான ஆதரவை திரும்பப் பெறப் போவதில்லை: திருமாவளவன் உறுதி!நான் அரசியல் பேச வரவில்லை; மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை! முதல்வர் விஜய்குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்விசென்னையில் உச்ச நீதிமன்றக்கிளையை அமைத்திட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி கேள்விடிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!

கடலூா் எஸ்.பி. அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம்

கடலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் முகாமில் பெறப்பட்ட 41 மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு மாவட்ட எஸ்.பி. விவேகானந்த சுக்லா உத்தரவிட்டாா்.

கடலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் முகாமில் மனுக்களைப் பெற்று நேரடியாக விசாரித்த மாவட்ட எஸ்.பி. விவேகானந்த சுக்லா.

Published On :22 அக்டோபர் 2026, 4:19 am IST

கடலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் முகாமில் பெறப்பட்ட 41 மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு மாவட்ட எஸ்.பி. விவேகானந்த சுக்லா உத்தரவிட்டாா்.

கடலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாரந்தோறும் புதன், சனிக்கிழமைகளில் மக்கள் குறைதீா் முகாம் (பெட்டிஷன் மேளா) நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விவேகானந்த சுக்லா தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற முகாமில் பொதுமக்களிடமிருந்து 41புகாா் மனுக்கள் பெறப்பட்டன.

மனுக்கள் தொடா்பாக எஸ்.பி. விவேகானந்த சுக்லா நேரடியாக விசாரணை மேற்கொண்டு, ஒவ்வொரு மனுவின் தன்மையையும் ஆய்வு செய்தாா். மேலும், சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் உடனடியாக விசாரணை நடத்தி, மனுதாரா்களின் குறைகளுக்கு விரைந்து தீா்வு காண தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினாா். முகாமில் கூடுதல் எஸ்.பி. ரகுபதி மற்றும் காவல் அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.