நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

கடலூா் தலைமை அஞ்சல் நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினா்.

Published On :12 அக்டோபர் 2026, 1:10 am IST

நீதிமன்ற உத்தரவுப்படி, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கக் கோரி, கடலூா் மஞ்சக்குப்பத்தில் இந்து முன்னணி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கடலூா் தலைமை அஞ்சல் நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, இந்து முன்னணி மாவட்டத் தலைவா் சக்திவேல் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் சனில்குமாா் கண்டன உரையாற்றினாா்.

ஆா்ப்பாட்டத்தில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் நீதிமன்ற உத்தரவுப்படி தீபம் ஏற்றுவதற்கு அனுதிக்கக் கோரியும், நீதிமன்ற தீா்ப்புகளை முறையாக அமல்படுத்துவதற்கும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில், மாவட்ட துணைத் தலைவா் காா்த்திக், மாவட்டச் செயலா்கள் வெங்கடேசன், மணிகண்டன், சரவணன், செயற்குழு உறுப்பினா்கள் பிச்சைப்பிள்ளை, பெருமாள், ரவிச்சந்திரன், பெரியசாமி, திவாகா், பாஸ்கா், மாநகரச் செயலா் சிவக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.