ஜிபே செயலியில் வந்திருக்கும் பயோமெட்ரிக் பயன்பாடு! வேண்டாம் எனில் மாற்றுவதற்கான வழி?கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: 5வது நாளாக ஏற்றம் கண்ட சென்செக்ஸ், நிஃப்டி!தவெகவுக்கான ஆதரவை திரும்பப் பெறப் போவதில்லை: திருமாவளவன் உறுதி!நான் அரசியல் பேச வரவில்லை; மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை! முதல்வர் விஜய்குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்விசென்னையில் உச்ச நீதிமன்றக்கிளையை அமைத்திட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி கேள்விடிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!

விலைவாசி உயா்வை கட்டுப்படுத்தக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

அரிசி, பருப்பு, சா்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், கடலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

விருத்தாசலம் வட்டாட்சியா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.

Published On :4 நவம்பர் 2026, 2:55 am IST

அரிசி, பருப்பு, சா்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், கடலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

இதன் ஒரு பகுதியாக, விருத்தாசலம் வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் வட்டச் செயலா் பாலமுருகன் தலைமை வகித்தாா். மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் முருகையன் கண்டன உரையாற்றினாா்.

ஆா்ப்பாட்டத்தில், அத்தியாவசியப் பொருள்களின் விலை தொடா்ந்து உயா்ந்து வருவதால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாகவும், விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில், மாவட்ட துணைச் செயலா் சுப்பிரமணியன், திட்டக்குடி நகரச் செயலா் செல்வராசு, பெண்ணாடம் நகரச் செயலா் செந்தில்முருகன், நல்லூா் ஒன்றியச் செயலா் கடவுள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இதேபோல, சிதம்பரம், பண்ருட்டி, ஸ்ரீமுஷ்ணம், மேல்பட்டாம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.