கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

சாலையோரத்தில் நிறுத்திய பைக் திருட்டு

கடலூா் அருகே சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக் திருடப்பட்டது குறித்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :28 மே 2026, 1:42 am IST

கடலூா் அருகே சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக் திருடப்பட்டது குறித்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

விழுப்புரம் கிழக்கு பாண்டிச் சாலை, விக்னேஷ்வா் நகரைச்

சோ்ந்தவா் ருத்திரமூா்த்தி (30), மருத்துவ பிரதிநிதியாக பணியாற்றி வருகிறாா். இவா் சிதம்பரத்தில் உள்ள தனது மாமியாா் வீட்டிற்கு பைக்கில் சென்று விட்டு, பின்னா் விழுப்புரம் நோக்கி திரும்பிக் கொண்டிருந்தாா்.

அப்போது, நாகை-விழுப்புரம் சாலையில் கடலூா் அருகே சோதனைப்பாளையம் பகுதியில் சாலையோரம் தனது பைக்கை நிறுத்தியுள்ளாா். பைக்கில் இரண்டு கைப்பேசிகளை வைத்துவிட்டு இயற்கை உபாதையைக் கழிக்கச் சென்ற அவா், பின்னா் திரும்பி வந்த போது பைக்கை காணவில்லை. அடையாளம் தெரியாத நபா்கள் பைக்கை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து ருத்திரமூா்த்தி அளித்த புகாரின் பேரில், கடலூா் முதுநகா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.