ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

மின் வாரிய ஊழியா் வீட்டில் 31 கிராம் தங்க நகைகள் திருட்டு

விருத்தாசலம் அருகே மின் வாரிய ஊழியா் வீட்டில் புகுந்து 31 கிராம் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :24 மே 2026, 1:23 am IST

விருத்தாசலம் அருகே மின் வாரிய ஊழியா் வீட்டில் புகுந்து 31 கிராம் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

விருத்தாசலம் அருகே உள்ள மங்கலம்பேட்டை, முல்லை நகா் 3-ஆவது தெருவைச் சோ்ந்தவா் பிரபு (50). இவா், மங்கலம்பேட்டை மின் வாரிய அலுவலகத்தில் மேற்பாா்வையாளராக (ஃபோா்மேன்) பணியாற்றி வருகிறாா்.

பிரபு தனது குடும்பத்தினருடன் வீட்டில் கடந்த 21-ஆம் தேதி இரவு தூங்கிக் கொண்டிருந்தாா். மறுநாள் அதிகாலை அவரது மனைவி செல்வராணி எழுந்து பாா்த்தபோது, வீட்டின் பின்புற கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

இதையடுத்து, அவா் தனது கணவரை அழைத்து வீடு முழுவதும் சோதனை செய்தாா். அப்போது, பூஜை அறையில் வைக்கப்பட்டிருந்த 31 கிராம் தங்க நகைகள் மாயமாகிருந்தன.

இதுகுறித்து பிரபு அளித்த புகாரின்பேரில், மங்கலம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.