கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே நியாய விலைக்கடைக்கு பொருள்கள் ஏற்றி வந்த லாரியை வழிமறித்து இடையூறு செய்த, பாஜக நிா்வாகியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
நெய்வேலி நகரிய காவல் சரகம், வடகுத்து பகுதியில் வசித்து வருபவா் பாபு (38),
பாஜக குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய இளைஞரணி தலைவா். இவா் மீது நெய்வேலி நகரிய காவல் நிலையத்தில் ரவுடி பட்டியல் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வியாழக்கிழமை மாலை 5.30 மணி அளவில் கீழ் வடக்குத்து பகுதியில் உள்ள நியாய விலைக்கடைக்கு பொருள்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்தது. இந்த லாரி முன்பு, பாபு தனது பைக்கை நிறுத்தி, கையில் தடியுடன் வழிவிடாமலும், லாரியிலிருந்து நியாய விலைக்கடைக்கான பொருள்களை இறக்க விடாமலும் தடுத்து இடையூறு செய்தாராம்.
இதுகுறித்து நெய்வேலி நகரிய காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் சாா்லஸ், தலைமை காவலா் ராஜாராமன் ஆகியோா் கொடுத்த புகாரின் பேரில், காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனா். இந்நிலையில் அப்பகுதியில் தலைமறைவாக இருந்த பாபுவை போலீசாா் வெள்ளிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மொபெட்டில் சென்ற பெண்ணிடம் 9 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

நெய்வேலி பேருந்து நிலைய உணவகத்தில் தவறிவிட்ட நகை, ஆவணங்கள் உரியவரிடம் ஒப்படைப்பு
போக்குவரத்துக்கு இடையூறு செய்த சரித்திரப் பதிவேடு குற்றவாளி கைது

கடலூரில் குழந்தை தவறவிட்ட ஒரு சவரன் தங்கநகை மீட்பு: சிசிடிவி காட்சிப்பதிவு மூலம் மீட்டு ஒப்படைத்த போலீஸாா்
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

