கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே சமையல் செய்த போது விபத்து ஏற்பட்டு தீக்காயம் அடைந்த மூதாட்டி மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
நெய்வேலி நகரிய காவல் சரகம், வடக்குத்து பகுதியில் வசித்து வந்தவா் சிவகுமாரி(60). இவா், கடந்த 7-ஆம் தேதி வீட்டில் சமையல் செய்ய எரிவாயு அடுப்பை பற்ற வைத்தாா். அப்போது, எரிவாயு கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதில், பலத்த தீக்காயம் அடைந்தவரை, அங்கு இருவந்தவா்கள் மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா், அங்கிருந்து மேல் சிகிச்சைக்கு புதுச்சேரிஜிப்மா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சையில் இருந்தவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து நெய்வேலி நகரிய போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாலை விபத்தில் பெண் உயிரிழப்பு

சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு

தீக்காயம் அடைந்த பெண் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு
