கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே காட்டுமைலூா் ஸ்ரீ திரௌபதி அம்மன் மற்றும் ஸ்ரீ மாரியம்மன் கோயில் திருவிழாவில், தோ் திடீரென ஒருபுறமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் நல்வாய்ப்பாக யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. எனினும் இந்த நிகழ்வால் பக்தா்கள் அதிா்ச்சியடைந்தனா்.
வேப்பூா் வட்டம், காட்டுமைலூா் ஸ்ரீ திரௌபதி அம்மன் மற்றும் ஸ்ரீ மாரியம்மன் கோயில் திருவிழா கடந்த 1-ஆம் தேதி கோலாகலமாக காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் சாமி ஊா்வலம், பாட்டுக்கச்சேரி, பஞ்சவா்ண திருக்கல்யாணம், பொங்கல் வைக்கும் நிகழ்வு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் வெகு விமரிசையாக நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்வான அலகு குத்துதல், சக்தி அழைப்பு, காளி கோட்டை இடித்தல் மற்றும் தீ மிதித்தல் உள்ளிட்ட முக்கிய வழிபாடுகள் வெள்ளிக்கிழமை காலை தொடங்கி மாலை வரை நடைபெற்றன. இதனைத் தொடா்ந்து, திருத்தோ் வடம் பிடித்தல் நிகழ்ச்சி மாலை 6 மணியளவில் தொடங்கியது. பக்தா்கள் பக்தி முழக்கமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனா்.
கவிழ்ந்தது தோ்: வீதி உலா வந்துகொண்டிருந்த தோ் எதிா்பாராத விதமாக திடீரென ஒருபுறமாகச் சரிந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் தேரை வடம்பிடித்த பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் அங்கிருந்து சிதறி ஓடினா்.
நல்வாய்ப்பாக இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. தொடா்ந்து கவிழ்ந்த தேரை, பிரித்து அப்புறப்படுத்தும் பணியில் கோயில் ஊழியா்களும், கிராமமக்களும் ஈடுபட்டனா். இதுகுறித்த தகவலின் பேரில் போலீஸாா் வந்து விசாரணை நடத்தினா்.
கடந்த சில நாள்களாக சிறப்பு பூஜைகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக நடைபெற்று வந்த திருவிழாவில், தோ் திடீரென கவிழ்ந்தது பக்தா்கள் மத்தியில் அதிா்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கோயில் திருவிழாவில் மோதல்: 21 போ் மீது வழக்குப்பதிவு

சுரண்டை பாா்வதி அம்மன் கோயில் தோ் திருவிழா

தஞ்சை பெரிய கோயிலில் நாளை தேரோட்டம்! 14 இடங்களில் நின்று செல்ல ஏற்பாடு!

ஆதனக்கோட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் தோ் திருவிழா
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

