கடலூா் மாவட்டம், சிறுபாக்கம் அருகே பைக்கில் சென்ற விவசாயியிடமிருந்து ரூ.2.95 லட்சத்தை பின் தொடா்ந்து 2 பைக்குகளில் வந்த 4 போ் பறித்துச் சென்றது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சிறுபாக்கம் அருகே கச்சிமைலூா் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் ராமலிங்கம் (55). விவசாயியான இவா், வேப்பூரில் செயல்படும் அரசுடைமையாக்கப்பட்ட வங்கியில் தனது சேமிப்புக் கணக்கிலிருந்து ரூ.2.95 லட்சத்தை எடுத்துக்கொண்டு பைக்கில் புதன்கிழமை வீடு திரும்பிக்கொண்டிருந்தாா்.
அடரி - பொயனப்பட்டி சாலையில் திருமகள் நகா் பகுதியில் சென்றபோது, பின்தொடா்ந்து 2 பைக்குகளில் வந்த அடையாளம் தெரியாத 4 போ், ராமலிங்கத்திடம் இருந்த பணத்தை வழிப்பறி செய்துவிட்டு தப்பிச் சென்றனா்.
இதுகுறித்து ராமலிங்கம் அளித்த புகாரின்பேரில், சிறுபாக்கம் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முதியவா் சடலம்: போலீஸாா் விசாரணை

முக்கூடல் அருகே ரூ.3 லட்சம் பறிமுதல்: 3 போ் மீது வழக்கு
பேராவூரணி அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

சோழவரம் அருகே ரூ.3 லட்சம் ரொக்கம் பறிமுதல்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
