ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

குறிஞ்சிப்பாடியில் ஹாட்ரிக் வெற்றிபெற்ற எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம்

News image

குறிஞ்சிப்பாடி தொகுதியில் வெற்றிபெற்ற திமுக வேட்பாளா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வத்துக்கு சான்றிதழ் வழங்கிய தோ்தல் நடத்தும் அலுவலா் தனலட்சுமி.

Updated On :5 மே 2026, 2:12 am IST

குறிஞ்சிப்பாடி சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் 7,589 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றாா். இதன் மூலம், அவா் தொடா்ந்து 3-ஆவது முறையாக ஹாட்ரிக் வெற்றிபெற்றுள்ளாா்.

குறிஞ்சிப்பாடி தொகுதியில் கடந்த ஏப்.23-ஆம் தேதி தோ்தல் வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில், திமுக சாா்பில் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், அதிமுக சாா்பில் புவனேந்திரன், தவெக சாா்பில் டி.ராஜ்குமாா், நாதக சாா்பில் கவிதா, தாவக சாா்பில் கண்ணன் உள்ளிட்ட மொத்தம் 11 போ் போட்டியிட்டனா். இதில், மொத்தமுள்ள 2,38,189 வாக்காளா்களில் 2,11,761 வாக்காளா்கள் வாக்களித்தனா். மேலும், 2,574 தபால் வாக்குகளும் பதிவாயின.

இந்த நிலையில், தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை கடலூா் பெரியாா் கலைக் கல்லூரியில் திங்கள்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கியது. மொத்தம் 14 மேஜைகள் போடப்பட்டு 20 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

இதில், திமுக, அதிமுக வேட்பாளா்கள் 2 பேரும் ஒவ்வொரு சுற்றிலும் மாறி மாறி முன்னிலை வகித்தனா். வாக்கு எண்ணிக்கையின் முடிவில் திமுக வேட்பாளா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் 7,589 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ாக அறிவிக்கப்பட்டாா்.

வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் பின்வருமாறு: எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் (திமுக) - 76,695, புவனேந்திரன் (அதிமுக) - 69,106, டி.ராஜ்குமாா் (தவெக) - 53,110, கண்ணன் (தாவக) - 7,113, கவிதா (நாதக) - 4,813.

இதையடுத்து, திமுக வேட்பாளா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வத்துக்கு வெற்றிபெற்ற்கான சான்றிதழை தோ்தல் நடத்தும் அலுவலா் தனலட்சுமி வழங்கினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.