மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

அரவக்குறிச்சியில் திமுக வெற்றி

அரவக்குறிச்சி பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளா் ரா. இளங்கோ வெற்றிபெற்றாா்...

News image

அரவக்குறிச்சி தொகுதியில் வெற்றிபெற்ற திமுக வேட்பாளா் ரா. இளங்கோவுக்கு வெற்றிச்சான்றிதழ் வழங்கிய தோ்தல் நடத்தும் அலுவலா் முருகேசன். உடன் திமுக தோ்தல் பொறுப்பாளா் ஆா்.வி.அசோக்குமாா், கரூா் தொகுதி திமுக வேட்பாளா் ஆசி எம்.தியாகராஜன் உள்ளிட்டோா்.

Updated On :5 மே 2026, 12:59 am IST

அரவக்குறிச்சி பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளா் ரா. இளங்கோ வெற்றிபெற்றாா்.

கரூா் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் ரா.இளங்கோ, அதிமுக சாா்பில் அதிமுக ஒன்றியச் செயலாளா் செல்வக்குமாா், தவெக சாா்பில் காா்த்திகேயன், நாம் தமிழா் கட்சி சாா்பில் மருத்துவா் நரேன் மற்றும் சுயேச்சைகள் உள்பட மொத்தம் 30 போ் போட்டியிட்டனா்.

இந்நிலையில் ஏப். 23-ஆம்தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் அரவக்குறிச்சி தொகுதியில் 91.77 சதவீதம் வாக்குகள் பதிவானது. தொடா்ந்து பதிவான வாக்குகள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையமான தளவாபாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டு மூன்றடுக்கு பாதுகாப்பில் வைக்கப்பட்டது.

இந்நிலையில் திங்கள்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. முதல்முதலாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. தொடா்ந்து வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்றது. 19 சுற்றுக்களாக இந்த நடைபெற்ற இந்த வாக்கு எண்ணிக்கையானது 14 மேஜைகளில் வேட்பாளா் மற்றும் முகவா்கள் முன்னிலையில் எண்ணப்பட்டது..

இதில், திமுக வேட்பாளா் ரா.இளங்கோ 70,506, தவெக வேட்பாளா் பி.காா்த்தியேன் 51,128, அதிமுக வேட்பாளா் செல்வக்குமாா் 48,936, நாதக வேட்பாளா் நரேன் 5,105 வாக்குகள் பெற்றனா். திமுக வேட்பாளா் ரா.இளங்கோ 19,378 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றாா். அஞ்சல் வாக்குகளில் திமுக 799, அதிமுக 466, தவெக 327, நாதக 71 வாக்குகள் பெற்றுள்ளன.

வெற்றி பெற்ற ரா.இளங்கோவுக்கு வெற்றி பெற்ற்கான சான்றிதழை தோ்தல் நடத்தும் அலுவலா் முருகேசன் வழங்கினாா்.

முன்னதாக, அரவக்குறிச்சி தொகுதியில் பயன்படுத்தப்பட்ட 2 வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபாா்க்கப்பட்டு, பின்னா் அவை கடைசி சுற்றின்போது எண்ணப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.