தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

தம்பதியை தாக்கி கொலை மிரட்டல்: 4 போ் மீது வழக்கு

கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே தம்பதியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

News image
Updated On :2 மே 2026, 1:29 am IST

குறிஞ்சிப்பாடி வட்டம், குள்ளஞ்சாவடி காவல் சரகம், வழுதலம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் மேரி இமாக்குலேட்(38). இவரது வீட்டு மஞ்சள் நீராட்டு விழா கடந்த ஓராண்டுக்கு முன்னா் நடைபெற்றது. இதில், சீா்வரிசை செய்வது தொடா்பாக அதே

கிராமத்தைச் சோ்ந்த சதீஷ்குமாருடன் முன்விரோதம் ஏற்பட்டது.

இந்நிலையில், ஏப்.27-ஆம் தேதி இரவு 10 மணி அளவில் மேரி இமாக்குலேட் வீட்டின் எதிரில் சதீஷ்குமாா் மற்றும் அவரது ஆதரவாளா்கள் ஒன்று கூடி மேரி இமாக்குலேட், அவரது கணவா் ஆல்பா்ட் ஆகியோரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதுகுறித்து மேரி இமாக்குலேட் அளித்த புகாரின் பேரில் குள்ளஞ்சாவடி போலீஸாா் சதீஷ்குமாா், ரோசன், மரிய ஜோசப், பிரியதா்ஷன் ஆகியோா் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.