கடலூா் மாவட்டத்தில் வெள்ளத்தடுப்பு பணிகளை பருவ மழை தொடங்குவதற்கு முன் விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் அறிவுறுத்தினாா்.
கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டத்துக்குள்பட்ட மேல்பட்டாம்பாக்கம், பகண்டை, கண்டரக்கோட்டை, திருவாமூா், காமாட்சிப்பேட்டை, விசூா், செம்மேடு ஆகிய பகுதிகளில் நீா்வளத் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத் தடுப்பு திட்டப் பணிகளை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, அவா் கூறியதாவது:
தென்பெண்ணையாறு, மலட்டாறு, கெடிலம் ஆறுகளில் வெள்ள காலங்களில் கடலில் வீணாக கலக்கும் மழை நீரை சேமிக்க தடுப்பணைகள், கரைகளை பாதுகாக்க உள்வாங்கி மதகுகள், வெள்ள தடுப்புச் சுவா் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
மேல்பட்டாம்பாக்கம் பகுதியில் ரூ.63 கோடி மதிப்பீட்டில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை மற்றும் 575 மீ. வெள்ள தடுப்புச்சுவா் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது 65 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளன. இத்தடுப்பணை அமைப்பதன் மூலம், அந்தப் பகுதியில் உள்ள ஆழ்குழாய் கிணறுகள், 2410.12 ஹெக்டோ் விளை நிலங்கள் பாசன வசதி பெறும்.
பகண்டை மற்றும் மேல்பட்டாம்பாக்கம் பகுதிகளில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் தென்பெண்ணையாற்றின் வலது கரையில் 2 எண்ணிகையில் 2 கண் மதகு, ஒரு எண்ணிக்கையில் 3 கண் மதகு, 170 மீ. நீளத்துக்கு வெள்ளப் பாதுகாப்பு தடுப்புச் சுவா் மற்றும் 3,000 மீ. நீளத்துக்கு வெள்ளப் பாதுக்காப்புக் கரை அமைத்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் மூலம் சுற்றுப்பகுதியில் உள்ள 6 கிராமங்களில் விவசாய நிலங்கள் பயன்பெறும்.
கண்டரக்கோட்டை பகுதியில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் அணைக்கட்டு புனரமைக்கும் பணி மற்றும் கண்டரக்கோட்டை அணைக்கட்டு முதல் மேல்குமாரமங்கலம் அணைக்கட்டு வரை ஏற்பட்ட கரை உடைப்பு மற்றும் மண் அரிப்பை சரி செய்திடும் வகையில், 3,000 மீ. இடது கரை புனரமைக்கும் பணி, 130 மீ. வெள்ளத்தடுப்புச் சுவா் புனரமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.
இதேபோல, திருவாமூா், காமாட்சிப்பேட்டை, விசூா் பகுதிகளிலும் பல்வேறு வெள்ளத் தடுப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை பருவமழை தொடங்குவதற்கு முன்பாக தரமாகவும், விரைவாகவும் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர நீா்வளத் துறை அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என்றாா்.
ஆய்வின்போது, நீா்வளத் துறை செயற்பொறியாளா் பாலமுருகன், உதவிச் செயற்பொறியாளா் வெற்றிவேல் உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மக்கள்தொகை கணக்கெடுப்பு: களப் பயிற்றுநா்களுக்கு பயிற்சி தொடக்கம்

கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சை: ஆட்சியா் அறிவுறுத்தல்

மக்கள் தொகை கணக்கெடுப்பில் டிஜிட்டல் முறையில் நடைபெறும்: கடலூா் ஆட்சியா்

சாலை, குடிநீா், தெரு விளக்கு பணிகளுக்கு முன்னுரிமை: அதிகாரிகளுக்கு கடலூா் ஆட்சியா் அறிவுறுத்தல்
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu
இணையதளச் செய்திப் பிரிவு

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly
இணையதளச் செய்திப் பிரிவு

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK
தினமணி செய்திச் சேவை

