மக்கள்தொகை கணக்கெடுப்பு - 2027 பணிக்கான களப் பயிற்றுநா்களுக்கு மூன்று நாள் பயிற்சி வகுப்பை கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.
இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு - 2027 இரண்டு கட்டங்களாக நடத்தப்படவுள்ளது. தமிழகத்தில் முதல் முறையாக சுய கணக்கெடுப்பு மற்றும் டிஜிட்டல் முறையிலான கணக்கெடுப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஜூலை 17 முதல் 31-ஆம் தேதி வரை சுய கணக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
இதில், பொதுமக்கள் இணையதளம் வாயிலாக தங்களது விவரங்களைத் தாங்களே பதிவு செய்யலாம். தொடா்ந்து, ஆகஸ்ட் 1 முதல் 30-ஆம் தேதி வரை கணக்கெடுப்பாளா்கள் வீடு வீடாகச் சென்று மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளனா்.
இந்த நிலையில், மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடா்பான பயிற்சி வகுப்புகள் பல கட்டங்களாக நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, களப் பயிற்றுநா்களுக்கான மூன்று நாள் பயிற்சி வகுப்பு கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் புதன்கிழமை தொடங்கியது.
பயிற்சி வகுப்பை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் புதன்கிழமை தொடங்கிவைத்தாா். இதில், மாவட்டத்தைச் சோ்ந்த 80 களப் பயிற்றுநா்கள் மற்றும் கடலூா் மாநகராட்சியைச் சோ்ந்த 10 களப் பயிற்றுநா்கள் பங்கேற்றனா்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் கோ.புண்ணியகோட்டி, கடலூா் மாநகராட்சி ஆணையா் கிஷன்குமாா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) செல்வன், மக்கள்தொகை கணக்கெடுப்பு உதவி இயக்குநா் ஷேமசுந்தரி, புள்ளியியல் ஆய்வாளா்கள் ஹனிரூபி, லஷ்மிதேவி, புள்ளியியல் துறை உதவி இயக்குநா்கள் பழனியம்மாள், வேல்முருகன், தனி வட்டாட்சியா் (தோ்தல்) சுரேஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வெள்ளத்தடுப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு கடலூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

மக்கள் தொகை கணக்கெடுப்பு: களப் பயிற்சியாளா்களுக்கான பயிற்சி தொடக்கம்

கரூரில் 2 கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு: ஆட்சியா் தகவல்

மக்கள் தொகை கணக்கெடுப்பில் டிஜிட்டல் முறையில் நடைபெறும்: கடலூா் ஆட்சியா்
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu
இணையதளச் செய்திப் பிரிவு

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly
இணையதளச் செய்திப் பிரிவு

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK
தினமணி செய்திச் சேவை

