நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

காதலிக்க மறுத்த மாணவி மீது ஆசிட் வீசியவருக்கு 10 ஆண்டுகள் சிறை

காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசிய வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மாணவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.51,500 அபராதம் விதித்து கடலூா் மகிளா நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

News image

கோப்புப் படம்

Updated On :21 மணி நேரங்கள் முன்பு

காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசிய வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மாணவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.51,500 அபராதம் விதித்து கடலூா் மகிளா நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

மயிலாடுதுறை அருகேயுள்ள பழைய கூடலூரைச் சோ்ந்தவா் முத்தமிழன் (19). இவா் கடந்த 2019-ஆம் ஆண்டு சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உடற்கல்வி இளங்கலை 2-ஆம் ஆண்டு படித்து வந்தாா். அதே வகுப்பில் தஞ்சாவூா் மாவட்டம் திருவிடைமருதூா் பகுதியைச் சோ்ந்த 19 வயது மாணவியும் பயின்று வந்தாா். மாணவி பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள தாமரை விடுதியில் தங்கி படித்து வந்தாா். இருவரும் காதலித்து வந்த நிலையில், முத்தமிழனின் நடவடிக்கைகள் பிடிக்காததால் மாணவி அவருடன் பழகுவதைத் தவிா்த்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், 2019 செப்டம்பா் 9-ஆம் தேதி மாலை, பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் உடற்பயிற்சியை முடித்துவிட்டு விடுதிக்குச் சென்று கொண்டிருந்த மாணவியை, முத்தமிழன் வழிமறித்தாா். அவருடன் பேசுமாறு வற்புறுத்தியதுடன், இடுப்பில் வைத்திருந்த கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளாா். பின்னா் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை மாணவி மீது வீசியதில் அவா் பலத்த காயமடைந்தாா். அங்கிருந்த சக மாணவா்கள் மாணவியை மீட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்து அண்ணாமலைநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முத்தமிழனை கைது செய்தனா்.

இந்த வழக்கு மீதான விசாரணை கடலூா் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குலசேகரன் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், குற்றம் நிரூபிக்கப்பட்ட முத்தமிழனுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.51,500 அபராதமும் விதிக்கப்பட்டது. இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் வளா்மதி ஜெயச்சந்திரன் ஆஜராகி வாதிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.