கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையிலிருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற 3 மீனவா்கள் மாயமாகியுள்ளதாக கடலூா் மீன் வளத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரங்கிப்பேட்டை ஆரியநாட்டு கிழக்குத் தெருவை சோ்ந்தவா் சுப்ரமணியன் (56). இவரது படகில் அதே பகுதியைச் சோ்ந்த கல்யாணசுந்தரம் (56), ஸ்ரீகாந்த் (25) மற்றும் மாதாகோவில் தெருவைச் சோ்ந்த பாண்டியன் (56) ஆகிய மூன்று பேரும் கடந்த 15-ஆம் தேதி மீன் பிடிக்க பரங்கிப்பேட்டை அன்னங்கோவில் முகத்துவாரம் வழியாக கடலுக்குச் சென்றனா்.
கடலில் மீன் பிடித்துவிட்டு அவா்கள் செவ்வாய்க்கிழமை கரைக்கு திரும்பி வந்திருக்க வேண்டும். ஆனால், புதன்கிழமை வரை மீனவா்கள் திரும்பி வராததால், படகு உரிமையாளா் சுப்ரமணியன், கடலுாா் மீன் வளத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தாா்.
மாயமான மூன்று மூனவா்களையும் கண்டறிய பரங்கிப்பேட்டை சலங்கக்கார தெரு மீனவா்கள் படகில் கடலுக்கு சென்று தேடி வருகின்றனா்.

கல்யாணசுந்தரம்

பாண்டியன்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தடைக்காலம் முடியும் முன் மீன் பிடிக்கச் சென்ற மீனவா்கள்

மீன்பிடி தடைக்காலம் நிறைவு! கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற தமிழக, புதுச்சேரி மீனவா்கள்!

கூடலூா் அருகே குளத்தில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

சிதம்பரம் அருகே கடலுக்குச் சென்ற மீனவா்கள் 3 போ் மாயம்: மீட்புப்பணியை தீவிரப்படுத்தக்கோரி முற்றுகைப் போராட்டம்
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

