வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஆனித்திருமஞ்சன உற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்!

சிதம்பரம் சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஆனித்திருமஞ்சன உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது பற்றி...

News image

நடராஜர் கோயில் சித்சபை எதிரே உள்ள கொடிமரத்தில் உற்சவ ஆச்சாரியாரால் ஏற்றப்பட்ட கொடி - படம் - தினமணி

Updated On :18 மணி நேரங்கள் முன்பு

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஆனித்திருமஞ்சன உற்சவ கொடியேற்றத்துடன் சனிக்கிழமை (ஜூன் 13) தொடங்கியது.

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்தியின் ஆனித்திருமஞ்சன தரிசன உற்சவம் இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்தி வீற்றுள்ள சித்சபை எதிரே உள்ள கொடிமரத்தில், பஞ்சமூர்த்திகள் முன்னிலையில், சுவாமியின் பிரதிநிதியான ஹஸ்தராஜரை முன்னிறுத்தி ஆவாஹணம் செய்து சனிக்கிழமை காலை 8 மணிக்கு உற்சவ ஆச்சாரியார் சி.ந.ராஜூ தீட்சிதர் ரிஷபக் கொடியை ஏற்றி வைத்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர்.டிஎஸ்பி டி.பிரதீப் மேற்பார்வையில் நகர காவல் ஆய்வாளர் வி.சிவானந்தம் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தார்.

உத்சவ விபரம்:

ஜூன் 14-ம் தேதி வெள்ளி சந்திர பிறை வாகன வீதிஉலா, 15-ம் தேதி தங்க சூரிய பிறை வாகன வீதிஉலா, 16-ம் தேதி வெள்ளி பூதவாகன வீதிஉலா, 17-ம் தேதி வெள்ளி ரிஷப வாகன வீதிஉலா (தெருவடைச்சான்), 18-ம் தேதி வெள்ளி யானை வாகன வீதிஉலா, 19-ம் தேதி தங்க கைலாச வாகன வீதிஉலா, 20-ம் தேதி தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வீதிஉலாவும், ஜூன் 21-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தேர்த்திருவிழா நடைபெற உள்ளது.

பின்னர் இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெறுகிறது. ஜூன். 22-ம் தேதி திங்கள்கிழமை அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறும். காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசியபூஜையும், பஞ்சமூர்த்தி வீதி உலா வந்த பின்னர், பிற்பகல் 3 மணிக்கு மேல் ஆனித்திருமஞ்சன தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது.

விழா ஏற்பாடுகளை கோயில் பொதுதீட்சிதர்களின் கமிட்டி செயலாளர் ஜெ.ஜெயசூர்யா தீட்சிதர், துணைச் செயலாளர் ஏ.கணபதிசுப்பிரமணிய தீட்சிதர் மற்றும் பொதுதீட்சிதர்கள் ஆகியோர் செய்துள்ளனர்.

Summary

The Aani Thirumanjanam festival at the Chidambaram Sri Natarajar Temple began on Saturday (June 13) with the flag-hoisting ceremony.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.