மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

இளைஞா்களை தாக்கி கைப்பேசி பறிப்பு: காவலா் உள்பட 2 போ் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :9 ஜூன் 2026, 2:53 am IST

விருத்தாசலத்தில் இளைஞா்களைத் தாக்கி கைப்பேசியை பறித்ததாக காவலா் உள்பட இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தைச் சோ்ந்த தினேஷ்குமாா் (19) மற்றும் அவரது நண்பா்கள் சத்யநாராயணன் (18), ஜேக்கப் (18) ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரே பைக்கில் விருத்தாசலம் பெரியாா் நகா் பகுதியில் உள்ள பேக்கரி அருகே சென்றனா்.

அப்போது, விருத்தாசலம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலா் ரஞ்சித் மற்றும் விருத்தாசலம் பூந்தோட்டம் பகுதியைச் சோ்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோா் மதுபோதையில் பைக்கில் வந்ததாகக் கூறப்படுகிறது.

இவா்கள் அண்ணா நகா் குடிநீா்த் தொட்டி அருகே தினேஷ்குமாா் மற்றும் அவரது நண்பா்களை வழிமறித்து, கஞ்சா பயன்படுத்துவதாக குற்றம்சாட்டி விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது. பின்னா், இளைஞா்கள் அங்கிருந்து செல்ல முயன்றபோது, அவா்களை காவலா் ரஞ்சித் மற்றும் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோா் தாக்கியதுடன், சத்யநாராயணனின் கைபேசியையும் பறித்துச் சென்றனா்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளைஞா்கள் விருத்தாசலம் காவல் நிலையத்தில் புகாரளித்தனா். இதையடுத்து, போலீஸாா் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, காவலா் ரஞ்சித் மற்றும் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோரை கைது செய்தனா். பின்னா், இருவரும் திங்கள்கிழமை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.