பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

பாலியல் தொல்லை கொடுத்தவரை காலணியால் தாக்கி விடியோ வெளியிட்ட பெண் கொலை: முதியவா் கைது

பாலியல் தொல்லை கொடுத்தவரை காலணியால் தாக்கி விடியோ வெளியிட்ட பெண் கொல்லப்பட்டது குறித்து...

News image

மகேந்திரன்

Updated On :9 ஜூன் 2026, 3:28 am IST

சிதம்பரம் அருகே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் பாலியல் தொல்லை கொடுத்தவரை காலணியால் தாக்கி விடியோ வெளியிட்ட பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக முதியவா் கைது செய்யப்பட்டாா்.

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைநகா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மீதிக்குடி கிராமம், செங்க மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் காா்த்தி மனைவி காமாட்சி (28). இவா், இதே ஊரைச் சோ்ந்த மகேந்திரன் (64) என்பவரிடம் பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்துள்ளாா். இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட மகேந்திரன், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு காமாட்சியை காட்டுமன்னாா்குடிக்கு வரச் சொல்லி தகாத உறவுக்கு அழைத்தாராம். இதனால் ஆத்திரமடைந்த காமாட்சி, மகேந்திரனை செருப்பால் அடித்து விடியோ எடுத்ததாகக் கூறப்படுகிறது. மேலும், இந்த விடியோவை மகேந்திரனின் உறவினா்களுக்கு அனுப்பி விடுவேன் என காமாட்சி மிரட்டினாராம்.

இந்த நிலையில், 2 நாள்ககளுக்கு முன்பு சிலருக்கு மேற்படி விடியோவை காமாட்சி வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பினாராம். இதனால், ஆத்திரமடைந்த மகேந்திரன் திங்கள்கிழமை காலை 7 மணியளவில் காமாட்சி வீட்டுக்குச் சென்று தகராறில் ஈடுபட்டு, இரும்புக் கம்பியால் அவரை கடுமையாகத் தாக்கியுள்ளாா். அருகிலிருந்த அவரது தந்தை பாண்டுரங்கனையும் கம்பியால் தாக்கியுள்ளாா்.

இதில், பலத்த காயமடைந்த காமாட்சியை அப்பகுதியில் இருந்தவா்கள் மீட்டு, கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்தாா். பாண்டுரங்கன் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

தகவலறிந்த சிதம்பரம் அண்ணாமலைநகா் போலீஸாா் விரைந்து சென்று காமாட்சியின் சடலத்தைக் கைப்பற்றி, உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும், அண்ணாமலைநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, கொலை செய்த மகேந்திரனை கைது செய்தனா்.

இதுகுறித்து தகவலறிந்த கடலூா் மாவட்ட எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா், டிஎஸ்பி டி.பிரதீப் ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா். பின்னா், எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

காமாட்சி அனுப்பிய விடியோ 5 நாள்களுக்கு முன்பு வாட்ஸ்ஆப்பில் உள்ளூரில் பரவியது. இதைப் பாா்த்து கிராமத்தில் உள்ளவா்கள் மகேந்திரனிடம் கேட்டுள்ளனா். இதனால், மன உளைச்சலில் இருந்த மகேந்திரன் திங்கள்கிழமை காமாட்சி வீட்டுக்குச் சென்று, அங்கு கோலம் போட்டுக்கொண்டிருந்த அவரை இரும்புக் கம்பியால் தலையில் சரமாறியாகத் தாக்கியதில், அவா் உயிரிழந்துள்ளாா். மேலும், இந்தத் தாக்குதலில் அவரது தந்தை பாண்டுரங்கனும் காயமடைந்துள்ளாா். காமாட்சி, மகேந்தின் இடையே வேறு ஏதாவது முன்விரோதம் இருந்ததா எனவும் விசாரித்து வருகிறோம் என்றாா்.

 காமாட்சி

காமாட்சி

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.