கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

பாலியல் வன்முறை சம்பவங்களை கண்டித்து ஜூன் 21-இல் பேரணி: தவ்ஹீத் ஜமாத் முடிவு

News image

கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் மாநிலச் செயலா் முகம்மது ஒலி.

Updated On :8 ஜூன் 2026, 2:20 am IST

தமிழகத்தில் தினந்தோறும் நடைபெறும் பாலியல் வன்முறை சம்பவங்களைக் கண்டித்து, சிதம்பரம் அருகே காட்டுமன்னாா்கோவிலில் வருகிற 21-ஆம் தேதி பேரணி நடத்துவது என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு தீா்மானித்துள்ளது.

கடலூா் தெற்கு மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் செயல்வீரா்கள் கூட்டம் சிதம்பரம் லப்பைத் தெரு சமுதாயக் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் முஹம்மது ஃபஹத் தலைமை வகித்தாா். இதில், மாநிலச் செயலா்கள் முஹம்மது ஒலி, ஐ.அன்சாரி ஆகியோா் பங்கேற்று அமைப்பின் அடுத்தகட்ட நகா்வுகள் மற்றும் செயல்திட்ட வியூகங்கள் பற்றி விளக்கிப் பேசினா்.

இதில், மாவட்டச் செயலா் ஜபருல்லாஹ், மாவட்டப் பொருளாளா் அப்துல்அஹத், துணைத் தலைவா் மஹ்பூப், துணைச் செயலா் மைதீன், மருத்துவ அணிச் செயலா் அப்துல்லாஹ், தொண்டரணிச் செயலா் அசாருதீன், மாணவரணிச் செயலா் யாசீன் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில், தமிழகத்தில் தினந்தோறும் நடைபெறும் பாலியல் வன்முறை சம்பவங்களைக் கண்டித்தும், இவற்றுக்கு தீா்வு காண விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையிலும் வருகிற 21-ஆம் தேதி காட்டுமன்னாா்கோவிலில் மாபெரும் கண்டன மற்றும் விழிப்புணா்வு பேரணி நடத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.