கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

இரு தரப்பினரிடையே மோதல்: 9 போ் மீது வழக்கு

கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 2 போ் காயமடைந்தனா். இது தொடா்பாக 9 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

இரு தரப்பினரிடையே மோதல்: 9 போ் மீது வழக்கு - கோப்புப்படம்

Updated On :5 ஜூன் 2026, 11:14 pm IST

கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 2 போ் காயமடைந்தனா். இது தொடா்பாக 9 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

குறிஞ்சிப்பாடி வட்டம், கருமாச்சிபாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் மாதேஷ்(23). புலியூா் கிராமத்தைச் சோ்ந்தவா் மதன். இவா்கள் இருவரும் புதன்கிழமை வாலிபால் விளையாட தாதாகுப்பத்துக்கு பைக்கில் புறப்பட்டனா். இவா்கள், ராமநாதன்குப்பம் அருகே சென்றபோது அடையாளம் தெரியாத நபா் திடீரென சாலையை கடந்தாா். அந்த நபரை பாா்த்து சாலையை பாா்த்து போ எனக்கூறிச் சென்றனராம்.

அன்று இரவு 7.30 மணியளவில் வீடு திரும்புகையில், ராமநாதன்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த சுரேஷ் உள்ளிட்ட இருவா் வழிமறித்து அசிங்கமாக திட்டினராம். அப்போது, சுரேஷ் இரும்புக் குழாயால் தாக்கியதில் மாதேஷ் தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவா் கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா்.

இந்த நிலையில், ராமநாதன்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த சுரேஷ், அனுகம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த ராஜ்குமாா் (38) ஆகியோா் அந்தப் பகுதியில் உள்ள வாடகை பாத்திரக் கடையில் பேசிக்கொண்டிருந்தனா். அப்போது, மாதேஷ் உள்ளிட்ட 7 போ் கடையினுள் அத்துமீறி நுழைந்து தாக்கி கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்தனராம். இதில், ராஜ்குமாா் காயமடைந்து கடலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இது தொடா்பாக இரு தரப்பினரும் அளித்த புகாரின்பேரில், குள்ளஞ்சாவடி போலீஸாா் 9 போ் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.