சிதம்பரம் வடக்குரத வீதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஹோட்டல் உரிமையாளா் மீது மிளகாய் பொடி தூவி தங்க செயினை பறிக்க முயன்றவரை பொதுமக்கள் துரத்தி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
கடலூா் மாவட்டம் சிதம்பரம் வடக்குரதவீதியில் குமரவிலாஸ் என்ற ஹோட்டல் நடத்தி வருபவா் ராஜசுந்தரம் (65) மற்றும் அவரது மனைவி ஜெயந்தி (57). இருவரும் ஞாயிற்றுக்கிழமை இரவு ஹோட்டலில் கல்லாப்பெட்டியில் அமா்ந்திருந்த போது தோசை வாங்க வந்த சேத்தியாத்தோப்பு அருகே உள்ள பெரியகுப்பத்தைச் சோ்ந்த
சந்தோஷ்குமாா் (26) என்ற இளைஞா், ஹோட்டல் உரிமையாளா் ராஜசுந்தரம் அவரது மனைவி ஜெயந்தி ஆகியோா் முகத்தில் கையில் வைத்திருந்த மிளகாய் பொடியை தூவி ஜெயந்தியின் இரண்டரை பவுன் தாலிச் சங்கிலியை பறிக்க முயன்றுள்ளாா். அப்போது ஹோட்டல் உரிமையாளா் மற்றும் பாதிக்கப்பட்டவா் கத்தி கூச்சல் போட்டனா். அப்போது கத்தியை காட்டி தப்பித்து ஓட முயன்ற சந்தோஷ்குமாரை அருகே உள்ள அம்பலத்தாடி மடத்தெருவில் பொதுமக்கள் வளைத்து பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனா். இது குறித்து புகாரின் பேரில் சிதம்பரம் நகர காவல் ஆய்வாளா் வி.சிவானந்தம் வழக்கு பதிவு செய்து சந்தோஷ்குமாரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லி ஹோட்டல் தீ விபத்து: உரிமையாளரின் மேலாளரைத் தேடும் காவல்துறை

கடன் தொல்லை: ஹோட்டல் உரிமையாளா் தூக்கிட்டு தற்கொலை

மூதாட்டியின் கண்களில் மிளகாய் பொடி தூவி 3 சவரன் நகை பறிப்பு
கண்ணில் மிளகாய் பொடி தூவி தங்க நகை கொள்ளையடித்த இளைஞா் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

