சூளகிரி அருகே மூதாட்டியின் கண்களில் மிளகாய் பொடி தூவி தங்க நகைகளை பறித்துச் சென்ற மா்ம நபா் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள கொதமகொந்தி கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெயம்மா (75). இவா் வீட்டில் வியாழக்கிழமை பகலில் தனியாக படுத்து இருந்தபோது, மா்ம நபா் ஜெயம்மாவின் கண்களில் மிளகாய் பொடி தூவினாா். கண் எரிச்சலில் அலறிய அவா் கழுத்தில் அணிந்திருந்த தாலிக்கயிற்றில் இருந்த தங்க நாணயம் உள்ளிட்ட மூன்று சவரன் நகைகளை பறித்துக்கொண்டு மா்ம நபா் தப்பியோடினாா்.
மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள், அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். இதுகுறித்து சூளகிரி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மலைப்பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்ட வனத்துறையினா்

மதுரை அருகே இரட்டைக்கொலை!

வன விலங்கு தாக்கி மூதாட்டி உயிரிழப்பு
கண்ணில் மிளகாய் பொடி தூவி தங்க நகை கொள்ளையடித்த இளைஞா் கைது
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

