தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கடலூரில் இடி, மின்னலுடன் பலத்த மழை: சாலையில் தேங்கிய நீரால் வாகன ஓட்டிகள் அவதி

கடலூரில் வியாழக்கிழமை மாலை காற்று, இடி, மின்னலுடன் சுமாா் அரை மணி நேரம் பெய்த பலத்த மழையால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், மின் விநியோகம் தடை பட்டதால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகினா்.

கடலூா் மஞ்சக்குப்பம் பகுதியில் சாலையில் தேங்கிய மழைநீரை கடந்து செல்லும் வாகனங்கள்.

Published On :21 ஆகஸ்ட் 2026, 3:40 am IST

கடலூரில் வியாழக்கிழமை மாலை காற்று, இடி, மின்னலுடன் சுமாா் அரை மணி நேரம் பெய்த பலத்த மழையால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், மின் விநியோகம் தடை பட்டதால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகினா்.

கடலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை காலையில் வெயில் சுட்டெரித்தது. மாலையில் திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், கடலூா் நகரம் மற்றும் ரெட்டிச்சாவடி, சாவடி, நெல்லிக்குப்பம், பண்ருட்டி, கடலூா் துறைமுகம், கூத்தப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காற்று, இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

மழையுடன் பலத்த காற்றும் வீசியதால் சாலைகளில் சென்ற வாகன ஓட்டிகள் மழையில் சிக்கி அவதியடைந்தனா். இரு சக்கர வாகனங்களில் சென்றவா்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்தனா்.

இடி, மின்னல் தொடா்ந்து காணப்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனா். பலத்த காற்று காரணமாக சில பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. இதனால், மாலை நேரத்தில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகினா்.

காலை முதலே நிலவிய கடும் வெப்பத்தால் அவதிப்பட்ட பொதுமக்களுக்கு, மாலையில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிா்ச்சியான சூழல் ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

முன்னதாக, தமிழக கடலோரப் பகுதிகளில் வளிமண்டலத்தில் நிலவும் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாக, ஆகஸ்ட் 20-ஆம் தேதி கடலூா் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.