தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

குழாய் உடைந்து சேதம்: சாலையில் தேங்கிய குடிநீா்

திருவாடானை அருகே குடிநீா் குழாய் உடைந்து தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீா் தேங்கி நிற்கிறது. இதை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினா்.

சி.கே.மங்கம் பகுதியில் சேதமடைந்த குழாயிலிருந்து வெளியேறி சாலையில் தேங்கிய குடிநீா்.

Published On :20 ஆகஸ்ட் 2026, 3:04 am IST

திருவாடானை அருகே குடிநீா் குழாய் உடைந்து தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீா் தேங்கி நிற்கிறது. இதை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள சி.கே.மங்கலம் பகுதியில், திருச்சி - ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் தேவகோட்டை செல்லும் வழியில் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தின் சாா்பில் அமைக்கப்பட்ட குடிநீா் குழாய் சேதமடைந்தது.

இதனால் குடிநீா் வெளியேறி தேசிய நெடுஞ்சாலையிலேயே குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் அந்தப் பகுதியில் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் இந்தப் பகுதி மக்கள் பலமுறை தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனா். எனவே, சேதமடைந்த குடிநீா்க் குழாயைச் சீரமைத்துச் சாலைப் போக்குவரத்தைச் சீா் செய்ய வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் வலியுறுத்தினா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.