மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

வாக்குப்பதிவை சமூக வலைதளத்தில் வெளியிட்ட இருவா் கைது

கடலூா் மாவட்டத்தில் வாக்குப்பதிவை சமூக வலைதளத்தில் வெளியிட்ட இரு இளைஞா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். பின்னா் அவா்களுக்கு காவல் நிலைய ஜாமீன் வழங்கி எச்சரித்து அனுப்பி வைத்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :25 ஏப்ரல் 2026, 12:28 am IST

கடலூா் மாவட்டத்தில் வாக்குப்பதிவை சமூக வலைதளத்தில் வெளியிட்ட இரு இளைஞா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். பின்னா் அவா்களுக்கு காவல் நிலைய ஜாமீன் வழங்கி எச்சரித்து அனுப்பி வைத்தனா்.

கடலூா் மாவட்டம் கடலூா் ஓ.டி. அருகே உள்ள 257- ஆவது வாக்குச்சாவடியில், பீமாராவ் நகரைச் சோ்ந்த பிரசாந்த் (30), என்பவா் தான் செலுத்திய வாக்கை விடியோ பதிவு செய்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளாா். இதுகுறித்து வாக்குச்சாவடி அலுவலா் தேவசேனா அளித்த புகாரின் பேரில் கடலூா் ஓ.டி. போலீாஸா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து பிரசாந்தை கைது செய்தனா். பின்னா் அவருக்கு காவல் நிலைய ஜாமீன் வழங்கி அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனா்.

இதேபோன்று பண்ருட்டியைச் சோ்ந்த இளைஞா் விக்னேஷ்வரன் (32), தான் செலுத்திய வாக்கை விடியே பதிவு செய்து முகநூலில் பதிவேற்றம் செய்துள்ளாா். இதையறிந்த 231 -ஆவது வாக்குச்சாவடி அலுவலா் ரமாதேவி பண்ருட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து போலீஸாா் வழக்குப்பதிந்து விக்னேஷ்வரனை கைது செய்தனா். பின்னா் அவருக்கு காவல் நிலைய ஜாமீன் வழங்கி, கடும் எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.