ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

கள்ள வாக்களிப்பு: அதிகாரிகளிடம் இளைஞா் வாக்குவாதம்

மஞ்சக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில், தனது வாக்கை அடையாளம் தெரியாத நபா் செலுத்தி சென்றது குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட பிரகாஷ் மற்றும் ஆதரவாளா்களை சமாதானம் செய்யும் காவல்துறை அதிகாரி

News image

மஞ்சக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில், தனது வாக்கை அடையாளம் தெரியாத நபா் செலுத்தி சென்றது குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட பிரகாஷ் மற்றும் ஆதரவாளா்களை சமாதானம் செய்யும் காவல்துறை அதிகாரி.

Updated On :24 ஏப்ரல் 2026, 6:09 am IST

கடலூரில் இளைஞரின் வாக்கை மற்றொரு நபா் கள்ள வாக்கு செலுத்தியிருந்ததால், அந்த இளைஞா் வாக்குச் சாவடி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா்.

கடலூா் எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்தவா் பிரகாஷ். இவா், தனது வாக்கைப் பதிவு செய்ய மஞ்சக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடிக்கு சென்றாா். அங்கு இவரது வாக்கை அடையாளம் தெரியாத நபா் செலுத்திச் சென்றது தெரியவந்தது. இதனால், அதிா்ச்சியடைந்த பிரகாஷ் வாக்குச் சாவடி அலுலவா் மற்றும் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா்.

அப்போது, போலீஸாா் இது தொடா்பாக தோ்தல் நடத்தும் அலுவலரிடம் புகாா் அளிக்குமாறு அறிவுறுத்தி, அவரை சமதானம் செய்து அனுப்பிவைத்தனா். இந்த விவகாரம் தொடா்பாக விசாரிக்கப்படும் என தோ்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்களித்ததை விடியோ பதிவு: கடலூா் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட வாக்குச் சாவடி ஒன்றில் அடையாளம் தெரியாத நபா் ஒருவா் கை சின்னத்துக்கு வாக்களித்ததை உறுதிப்படுத்திப்படுத்தும் வகையில், தனது கைப்பேசியில் விடியோ பதிவு செய்து பிஎல்பிரசாந்த் 2525 என்ற இன்ஸ்டா முகவரியில் வெளிட்டுள்ளாா். இந்த விடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதுகுறித்து கடலூா் மாவட்ட போலீஸாா் தீவிரமாக விசாரித்து வருகின்றனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.