ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

விருத்தாசலம் மாவட்டத்தை உருவாக்க வலியுறுத்துவேன்! - பிரேமலதா விஜயகாந்த்

விருத்தாசலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வலியுறுத்துவேன் என்று விருத்தாசலம் பேரவைத் தொகுதி வேட்பாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினாா்.

News image

பிரேமலதா விஜயகாந்த் - கோப்புப் படம்

Updated On :7 ஏப்ரல் 2026, 12:14 am IST

சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி வெற்றிவெற்று மீண்டும் ஆட்சியமைத்தவுடன் விருத்தாசலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க மு.க.ஸ்டாலினிடம் வலியுறுத்துவேன் என்று தேமுதிக பொதுச் செயலரும், விருத்தாசலம் சட்டப் பேரவைத் தொகுதி வேட்பாளருமான பிரேமலதா விஜயகாந்த் கூறினாா்.

திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற கூட்டணி சாா்பில், விருத்தாசலம் தொகுதியில் தேமுதிக பொதுச் செயலா் பிரமலதா விஜயகாந்த் போட்டியிடுகிறாா். திங்கள்கிழமை விருத்தாசலம் வந்த அவா், விருத்தாசலம் வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தாா். பின்னா், பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளா்களிடம் தெரிவித்தாவது:

விருத்தாசலம் கொளஞ்சியப்பா், விருத்தகிரீஸ்வரரை வணங்கி வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். எங்கள் உள்ளத்தில் நிலைத்திருக்கக்கூடிய தொகுதி விருத்தாசலம். இந்தத் தோ்தலில் வெற்றிபெற்று தொகுதி மக்களுக்கு விஜயகாந்த் விட்டுச் சென்ற பணிகளை செய்வேன்.

சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி வெற்றிவெற்று மீண்டும் ஆட்சியமைத்தவுடன் விருத்தாசலத்தை மாவட்டமாக அறிவிக்க மு.க.ஸ்டாலினிடம் வலியுறுத்துவேன். 2006-க்குப் பிறகு 20 ஆண்டுகள் கடந்து மீண்டும் வரலாறு திரும்புகிறது.

விருத்தாசலத்தை மிகச்சிறந்த தொகுதியாக மாற்ற பல திட்டங்கள் வைத்துள்ளேன். அதை பிரசாரத்தில் கூறுவேன். திமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைக்க வேண்டும் என்பது பல ஆண்டுகளாக நினைத்த ஒரு விஷயம். கருணாநிதியும், விஜயகாந்தும் இருக்கும்போதே நடக்க வேண்டியது. தாமதமாக இப்போது நடந்துள்ளது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.