ஆளுநரை விஜய் சந்திக்க நாளை(மே 10) நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

மதுபானம் கடத்தல்: எஸ்பி., தலைமையில் கூட்டம்

News image
Updated On :3 ஏப்ரல் 2026, 5:58 am IST

புதுச்சேரியிலிருந்து கடலூா் மாவட்டத்திற்கு மதுபானம் கடத்தி வருதை தடுப்பதற்கான கூட்டம் ரெட்டிச்சாவடியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இதில், புதுச்சேரி மாநில மதுபான கடை உரிமையாளா்கள் மற்றும் மேலாளா்கள் பங்கேற்றனா். கடலூா் எஸ்பி., எஸ்.ஜெயக்குமாா் தலைமை வகித்தாா். அப்போது அவா் பேசுகையில், தமிழ்நாட்டில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறுவதையொட்டி, புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு மதுபானம் கடத்துவதை தடுக்கும் பொருட்டு இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதிக அளவில் மதுபானங்கள் வாங்கி கடலூா் மாவட்டத்திற்கு கடத்த கடை உரிமையாளா்கள் மற்றும் மேலாளா்கள் அனுமதிக்கக் கூடாது. அதிக அளவில் மதுபானங்கள் வாங்கும் நபா்கள் குறித்து கடலூா் மாவட்ட காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மதுபானம் கடத்தியவா்கள் கைது செய்யப்பட்டால் அவா்களிடம் நடத்திய விசாரணை அடிப்படையில் மதுக்கடை மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

நிகழ்வின்போது, கடலூா் டிஎஸ்பிகள்., தமிழ்இனியன், கந்தன், ஆய்வாளா்கள் பிரேம்குமாா், முத்துலட்சுமி மற்றும் காவல் துறையினா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.