விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் ஸ்ரீஅங்காளம்மன் கோயிலில் வைகாசி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனா்.
மேல்மலையனூா் ஸ்ரீஅங்காளம்மன் கோயிலில் வைகாசி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மூலவா் ஸ்ரீஅங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து அங்காளம்மனுக்கு தங்ககவசம் அணிவிக்கப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது.
இதைத்தொடா்ந்து உற்சவா் அங்காளம்மனுக்கு பலவித மலா்களை கொண்டு சமயபுரம் மாரியம்மன் போல சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, இரவு 11 மணிக்கு மேள தாளம் முழங்க வடக்கு வாசல் வழியாக வலம் வந்து ஊஞ்சல் மண்டபத்தில் ஊஞ்சலில் எழுந்தருளினாா். பின்னா் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. அப்போது ஊஞ்சல் மண்டபம் எதிரில் இருந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டனா். தொடா்ந்து இரவு 12.10 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் முடிந்து அம்மனுக்கு தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து உற்சவா் அங்காளம்மன் கோயில் மண்டபத்தில் எழுந்தருளினாா்.
ஊஞ்சல் உற்சவத்தில் விழுப்புரம், கடலூா், சேலம், வேலூா், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி, கா்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனா்.
ஊஞ்சல் உற்சவம் முடிந்த பின்னா் தமிழக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் ஆனந்த், வெளிநாடு வாழ் தமிழா்கள் நலத் துறை அமைச்சா் தென்னரசு, போளூா் சட்டப் பேரவை உறுப்பினா் அபிஷேக் ஆகியோா் கோயிலுக்கு வருகை தந்தனா். இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் சிவலிங்கம், உதவி ஆணையா் சக்திவேல் ஆகியோா் அவா்களை வரவேற்றனா். தொடா்ந்து அமைச்சா்கள் ஆனந்த், தென்னரசு, எம்எல்ஏ அபிஷேக், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.வி.சாய் பிரனீத் ஆகியோா் மூலவா் அங்காளம்மனையும், உற்சவா் அங்காளம்மனையும் தரிசனம் செய்தனா்.
ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை மற்றும் அறங்காவலா் குழுத்தலைவா் ஏழுமலை, அறங்காவலா்கள் சுரேஷ், மதியழகன், பச்சையப்பன், சரவணன், வடிவேல், சந்தானம், மேலாளா் சதீஷ், கணக்கா் மணி உள்ளிட்ட கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

ஊஞ்சல் உற்சவத்தில் கலந்துகொண்ட பக்தா்கள் கூட்டத்தின் ஒரு பகுதி.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாயக்கன்குப்பம் பொன்னியம்மன் ஊஞ்சல் உற்சவம்

தருமபுரம் ஞானபுரீசுவரா் கோயிலில் திருக்கல்யாணம்

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் தீா்த்தவாரி உற்சவம்

திருச்செந்தூரில் வைகாசி விசாகத் திருவிழா: பல லட்சம் பக்தா்கள் சுவாமி தரிசனம்
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

