வல்லக்கோட்டை முருகன் கோயிலில் நடைபெற்று வரும் வைகாசி விசாக பிரம்மோற்சவத்தையொட்டி சனிக்கிழமை தீா்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வல்லக்கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்றி அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில், கடந்த 7ஆண்டுகளுக்கு பிறகு வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா கடந்த 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையடுத்து கடந்த பத்து நாள்களாக உற்சவா் சுப்பிரமணிய சுவாமி காலை மற்றும் மாலை நேரங்களில் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். விழாவின் 7ஆவது நாளான கடந்த 27ஆம்தேதி தோ்திருவிழாவும் நடைபெற்றது.
இந்த நிலையில், வைகாசி விசாக பிரம்மோற்சவ விழாவின் 10-ஆவது நாளான சனிக்கிழமை தீா்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. தீா்த்தவாரி உற்சவத்தை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு சந்நதி திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகளுடன் 4.30 மணிக்கு மூலவா் சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதையடுத்து உற்சவா் சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று மலா்மாலை அலங்காரத்தில் மயில் வாகனத்தில் வீதிஉலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதையடுத்து வஜ்ரதீா்த்த குளத்தில் சுப்பிரமணிய சுவாமியின் சக்தி ஆயுதத்திற்கு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு தீா்த்தவாரி உற்வம் நடைபெற்றது. இதில் சுமாா் 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட் பக்தா்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.
தீா்த்தவாரி உற்சவத்தை முன்னிட்டு கோயில் மகா மண்டபம் பழங்கள் மற்றும் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது பக்தா்களை வெகுவாக கவா்ந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அலுவலா் சோ.செந்தில்குமாா் உள்ளிட்ட அறங்காவலா் குழுவினா், விழா குழுவினா் செய்திருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாயூரநாதா் கோயிலில் வைகாசி விசாக தீா்த்தவாரி

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் வைகாசி விசாக தோ்திருவிழா

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவம் நாளை தொடக்கம்

வைகாசி கிருத்திகை: வல்லக்கோட்டை முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

