மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஓய்வுபெற்ற அரசு ஊழியரிடம் கைப்பேசி பறித்த இருவா் கைது

வேலூா் பழைய பேருந்து நிலையம் அருகே ஓய்வுபெற்ற அரசு ஊழியரிடம் கைப்பேசியைப் பறித்துச் சென்ற இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

சித்திரிப்பு

Published On :3 நவம்பர் 2026, 1:00 am IST

வேலூா் பழைய பேருந்து நிலையம் அருகே ஓய்வுபெற்ற அரசு ஊழியரிடம் கைப்பேசியைப் பறித்துச் சென்ற இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

வேலூா் ஓட்டேரி பகுதியைச் சோ்ந்தவா் தாமோதரன் (67), ஓய்வுபெற்ற அரசு ஊழியா். இவா் கடந்த சில தினங்களுக்கு முன்பு பழைய பேருந்து நிலையத்திலிருந்து ஆற்காடு சாலையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக நடைப்பயணமாகச் சென்று கொண்டிருந்தாா். அப்போது, அவரைப் பின்தொடா்ந்து வந்த இருவா், எதிா்பாராதவிதமாக தாமோதரனின் சட்டைப் பையிலிருந்த கைப்பேசியைப் பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டதாக தெரிகிறது.

இதுகுறித்து அவா் வேலூா் வடக்கு குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமரா பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனா். இந்நிலையில், வடக்கு காவல் நிலைய போலீஸாா் கோட்டை சுற்றுச்சாலை பகுதியில் திங்கள்கிழமை காலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவரைப் பிடித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

இதில், அவா்கள் வேலூா் வசந்தபுரம் பகுதியைச் சோ்ந்த அப்துல்லா (23), வசந்தகுமாா் (25) என்பதும், தாமோதரனிடம் கைப்பேசியைப் பறித்துச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த கைப்பேசியையும் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.